விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கியமான ஒரு திருப்பம் வந்திருக்கிறது. இதுகுறித்தான முழு எபிசோடையும் பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டுக்கு வந்த மருமகள்களிடம் பாரபட்சம் காண்பிக்கிறார். பணக்கார, படித்த மருமகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். ஆனால் படிக்காத மருமகளை அடிமை போல் வீட்டு வேலை வாங்குகிறார். ஆனால் இதை கூட பொறுத்துக் கொள்ள முடியும் பெற்ற மகன்களுக்கு இடையே பாரபட்சம் பார்த்து முத்துவை ஏதோ வேண்டாத பிள்ளையாக நினைத்து அவமானப்படுத்தி வெறுத்து வருகிறார்.
அதனால் அவர்களுக்கு ரூம் கூட இல்லை. நடுவீட்டில்தான் தூங்குகின்றனர். இதனை மாற்ற வேண்டும் என்றும் ஒரு ரூம் கட்ட வேண்டும் என்றும் மீனா மற்றும் முத்து முயற்சி எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் முத்து கார் ஓட்டி வரும் பணத்தை சேர்த்து வைக்கிறார்.
மீனாவும் பூக்கட்டி பணத்தை சேர்த்து வைக்கிறார். இப்போது மீனாவுக்கு ஒரு பெரிய ஆஃபர் வந்திருக்கிறது. இதன்மூலம் பூ கட்டி பெரிய அளவு சம்பாதிக்கலாம். இதை வைத்து ரூமும் கட்டிவிடலாம். ஆனால் தனக்கு போட்டியாக மீனா வருகிறார் என்று பொறாமையில் பொங்கியெழும் சிந்தாமணி, விஜயாவின் வீக்னஸ் பாயிண்டை புரிந்து கொண்டார். அதாவது விஜயாவுக்கு மீனா என்றால் பிடிக்காது என தெரிந்து கொண்ட சிந்தாமணி, விஜயாவிடம் உங்க மருமகளுக்கு வந்த ஆர்டர் பெரிய ஆர்டர். அதை மட்டும் செய்து விட்டால் உங்கள் மருமகளுக்கு கை நிறைய பணம் கிடைக்கும்.
இதனால், விஜயா மீனாவை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து மீனாவை அங்கு போக விடாமல் தடுக்கிறார். விஜயா தனக்கு கை வலிக்குது என்றெல்லாம் கூறி மீனாவை தடுத்து வருகிறார். மீனாவும் அவரை விட்டுப் போக மனமில்லாமல் அவரைப் பார்த்துக் கொள்கிறார்.
மண்டபத்தில் நடக்கும் டெகரேஷனை சரியான நேரத்தில் நன்றாக செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக வீடியோ காலில் மூலம் எப்படி பண்ண வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்.
இதன்மூலம் நல்லபடியாக முடித்து டெக்ரேஷனை முடித்து விடுகிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் விஜயா மட்டும் நாம் போட்ட பிளானில் தோற்றுப் போய் விட்டோமே என்று வைத்தெரிச்சலில் இருக்கிறார்.