அடுத்த anchor யார்? குக் வித் கோமாளி டீம் வெளியிட்ட வீடியோ!

CWC 5 new anchor
CWC 5
Published on

குக் வித் கோமாளியின் அடுத்த anchor யார் என்ற ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசன் பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமானது. கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்ந்தது. இந்த சீசனில் ஏராளமான வித்தியாசமான சுற்றுகள் வைக்கப்பட்டன. குடும்பச்சுற்று, வெளிநாட்டவர்கள் சுற்று, பாட்டிகள் மற்றும் குட்டீஸ்கள் ரவுண்ட் என மிகவும் கலகலப்பாகச் சென்றது. அதேபோல், சில படக்குழுக்களும் வந்து நிகழ்ச்சியை கோலாகலப்படுத்தினர்.

முதலில் நான்கு வாரங்களுக்கு ஒருமுறை எவிக்ஸன் இருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் பழைய ஃபார்முக்கு கொண்டு வந்தனர். அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு எவிக்ஸன் என கொண்டுவந்தனர்.

இதனையடுத்து செமி ஃபைனல் மற்றும் வைல் கார்டு சுற்றுகள் நடைபெற்றன. அந்தவகையில், பிரியங்கா, சுஜிதா, இர்ஃபான், ஜோயா மற்றும் பூஜா என ஐந்து பேர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

இதற்கிடையே மணிமேகலை பிரியங்கா ஆகியோருக்கு இடையில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. மணிமேகலை, பிரியங்கா தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார், டாமினேட் செய்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஆனால், பிரியங்கா இதுகுறித்து எதுவும் பேசவில்லை. பிரியங்காவிற்கு ஆதரவாக பலர் பேசிவருகின்றனர். குறிப்பாக குக் வித் கோமாளி செட்டில் உள்ளவர்கள் பிரியங்காவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனால், மணிமேகலை இனி இந்த ஷோவில் தொடரமாட்டார் என்பது உறுதியானது. இதனையடுத்து ரக்ஷன் மட்டுமே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்தநிலையில்தான், விஜய் டிவி ஒரு புது ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. அதாவது குக் வித் கோமாளியின் next anchor யார் என்ற ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறது. இதனையடுத்து அது ஜாக்குலின் ஆக இருக்குமோ என்று பலரும் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்த பேய் படத்தைப் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா? 
CWC 5 new anchor

ஏனெனில், ரக்ஷன் சென்ற எபிசோடில் ஒரு உடை அணிந்திருந்தார். அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வேலைப் பார்க்கும் அனைவர் பெயரையும் குறிப்பிட்டிருந்தார் அந்த உடையில். அதில் ஜாக்குலின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்த வாரத்துடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், புது anchor களமிறங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. முடிந்த கல்யாணத்திற்கு எதுக்குடா மேளம் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com