முதல் டாஸ்க்கில் வென்றது இவர்களா? பயத்தில் பிக்பாஸ் 7 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் 7 டாஸ்க்
பிக்பாஸ் 7 டாஸ்க்
Published on

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வெடித்த திடீர் பூகம்பத்தால் போட்டியாளர்கள் கதிகலங்கியுள்ளனர்.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டில் 2 வீடுகள் உருவாக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்மால் பாஸ் வீடு, பிக்பாஸ் வீடு என 2 வீடுகளாக பிரிந்து ஹவுஸ்மேட்ஸ்கள் அட்டகாசமாக விளையாடி வருகின்றனர். இதில் மேலும் ஒன்று இல்லாமல் ஐந்து பேரை வைல்டு கார்டு போட்டியாளராக இறக்கினார்கள். இவர்களில் 2 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது பிக்பாஸில் மொத்தம் 14 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் புதுவிததாமக மீண்டும் ஒரு வைல்டு கார்டு எண்ட்ரி நடைபெறபோகிறது. என்னடா இது புது ட்விஸ்ட் என்று அனைவரும் ஷாக் ஆகும் அளவிற்கு அடுத்தடுத்து பல சுவாரஸ்யங்கள் இந்த பிக்பாஸில் நிகழ்ந்து வருகிறது. அதாவது வைல்ட் கார்ட் எண்ட்ரி என்றாலே புதிதாக வருபவர்கள் தானே. ஆனால், இந்த சீசனில் ஏற்கனவே எவிக்‌ஷன் செய்யப்பட்டு அனுப்பட்டு இருக்கும் போட்டியாளர்களில் இருந்து மூன்று பேர் வர இருக்கிறார்கள்.

இதை கேட்டு அரண்டு போன பிக் பாஸ் வீட்டினர், இருக்கிறதே போதும் திரும்ப யாரும் வரவேணாம் என்று, அனைவரும் ஒன்றிணைந்து “Lets Play For The House” என்று தீயாய் களமிறங்க முடிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று 51வது நாள் வெளியான புரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதில், பூகம்பத்தின் முதல் டாஸ்க் தொடங்கியது. ரிஸ்க்கான இந்த டாஸ்க்கில் தோற்றால் 3 பேர் வெளியேறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

அதில் 3 அடுக்கு ரேக் கொடுக்கப்பட்டுள்ளது, அந்த ரேக்கின் ஒருமுனையில் பந்தை வைத்து மேலும் கீழும் அசைத்து மறுமுனையில் இருக்கும் கூடையில் போடுவதுதான் டாஸ்க். ஆனால், இந்த டாஸ்கில் நிக்சன், மணி மட்டும் சரியாக விளையாடி வெற்றிப்பெற்றனர். ஆனால், மற்ற போட்டியாளர்கள் அனைவரும் முதல் டாஸ்கில் தோற்றனர். இதனால், Vaild Card என்ட்ரி மூலம் வரக்கூடிய 3 பேரில் ஒருவர் நிச்சயமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வருவார் என்பது உறுதியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com