manikandan
manikandan

பிக்பாஸில் இந்த வாரமாவது இவர் வெளியேறுவாரா? ஜனனி மற்றும் தனலக்ஷ்மிக்கு குறும் படம் உண்டா?

Published on

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், டபுள் எவிக்ஷன் என போன வாரம் அறிவித்ததையடுத்து கடந்த வாரம் ராம், ஆயிஷா இருவரும் எவிக்சனில் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினர். எஞ்சியிருக்கும் 11 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்த வார போட்டியில் தொடக்கத்தில் இருந்தே பரபரப்பு காணப்படுகிறது.

அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு பேரை எவிக்சனுக்கு நாமினேட் செய்தனர். அதன்படி, மணிகண்டன், அசீம், விக்ரமன், ரச்சிதா ஆகியோர் சக போட்டியாளர்களால் குறி வைக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ்
பிக்பாஸ்

அதனால், இந்த வாரம் போட்டி முதல் நாளில் இருந்தே சூடு பிடிக்கத் தொடங்கி இருந்தது.அத்தோடு இந்த வாரத்தின் தலைவராக மைனா நந்தினி தேர்வாகியும் இருந்தார்.

நேற்றைய போட்டியில் விக்ரமன் முதலில் கோட்டினை தொட்டபிறகும் தனலட்சுமி மற்றும் ஜனனி பொய் சொல்லி விக்ரமனின் வாய்ப்பை தட்டி பறித்தனர். இதனால் கொந்தளித்த ரசிகர்கள் இன்று கமல் குறும்படம் போட்டு ஜனனி மற்றும் தனலெஷ்மி முகத்திரையை கிழிப்பாரா? என எதிர்பார்க்கின்றனர்.

இந்த வார ஓட்டிங் லிஸ்டில் மணிகண்டன் அல்லது ADK இருவரும் மிக குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். அதனால் இந்த இருவரில் ஒருவர், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே பிக் பாஸ் ரசிகர்களிடம் காணப்படுகின்றது.தற்பொழுது வெளியாகியிருக்கும் அதிகாரப்பூர்வமற்ற ஓட்டிங் விபரத்தின் படி இந்த வாரம் மணிகண்டன் தான் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று செய்திகள் கசிந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com