இந்த வாரம் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு வருவாரா? பிக்பாஸ் ரசிகர்கள் ஆவல்!

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

விஐய் டிவியில் கமல் ஹாசன் நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களைவெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில், தற்போது சீசன் 6 நடைபெற்று வருகிறது. தற்போது பிக்பாஸ் தொடங்கி பல நாட்களை கடந்து விட்ட இந்த சீசனானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பரபரப்பாக ஓடிக்கொண்டுஇருக்கிறது. இந்நிகழ்ச்சியானது எப்போதும்விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல்ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கான முக்கிய காரணம் போட்டியாளர்களிடையே இடம்பெறுகின்ற சலசலப்புக்களும், முகச்சுளிப்புக்களும், சண்டைகளும் தான். போட்டியாளர்கள் பலர் கண்டன்ட்களை வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்துவருகிறார்கள்.

இதில் தனலட்சுமி , அசீம் , விக்ரமன் போன்றோர் மக்களிடையே பெரும்செல்வாக்கு பெற்றவர்களாகவும் கன்டன்ட் மன்னர்களாகவும் விளையாடி வருகிறார்கள்.

கடந்த வாரம் முழுவதும் நீதிமன்றம் மற்றும் வழக்கு என்ற ஒரு டாஸ்கினை பிக்பாஸ் வழங்கியிருந்தார். அதில் போட்டியாளர்கள் நீதிபதியாகவும் வக்கீலாகவும் சாட்சிகளாகவும் மாறி விளையாடினர்.

அதில் அசீம் மற்றும் விக்ரமன் சிறந்த போட்டியாளர்களாக சக ஹவுஸ் மேட்டுகளால் தேர்வு செய்யப்பட்டனர். இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டதாக ஷிவின் கணேசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த வாரம் முழுவதும் குறைவான பங்களிப்பை செய்ததாக குயின்சி மற்றும் ராபர்ட் மாஸ்டரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Simbu
Simbu

இந்த நீதிமன்ற வழக்குகளிலும் பல்வேறு சண்டைகளும், சச்சரவுகளும் ஹவுஸ் மேட்டுகளால் சிறப்பாக செய்யபட்டது எனலாம். இந்த சண்டைகளும்,சச்சரவுகளும் வார இறுதியில் நடிகர் கமல்ஹாசனால் பஞ்சாயத்து செய்யப்படும். தற்போதைய சூழலில் கமல்ஹாசன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வாரம் கமல்ஹாசன் நிகழ்ச்சிக்கு வருவாரா? என தெரியவில்லை. அவருக்கு பதில் சிம்புவோ, இதற்க்கு முன்பு ஒருமுறை நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணனோ இந்த வார நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கலாம் என பிக் பாஸ் ரரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. உடல் நிலை சரியாகி கமல்ஹாசனே வருவாரா? இன்று இரவு தெரிந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com