அனைவராலும் ரெட்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ எண்ட்ரி கொடுக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்7 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். விதிப்படி பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க வேண்டும். பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களுமே மிக விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்ததால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே இந்நிகழ்ச்சி உருவாக்கிக்கொண்டது.
இதையடுத்து பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டு அட்டகாசமாக ஓடி கொண்டிருக்கிறது. புது விதமாக இந்த சீசனில் மட்டும் பிக்பாஸ் ஸ்மால் பாஸ் என்ற கான்சப்ட்டை கொண்டு வந்தனர். அதாவது கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு பிடிக்காதவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுவார்கள். அவர்களே பிக்பாஸ் வீட்டாருக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுப்பார்கள்.
இப்படி சுவாரஸ்யமாக நகர்ந்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7-ல் கடந்த வாரம் மிகப்பெரிய புரட்சி நடந்தது என்றே சொல்லலாம். அதாவது பெண் சுதந்திரம் என்ற பெயரில், அனைவராலும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் பெருகியது. பொதுமக்களே மினி குறும்படங்களை வைரலாக்கி பிரதீப்புக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
இந்த நிலையில், இன்று பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவால் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அது என்னவென்றால், எனக்கான வாய்ப்பை மீண்டும் கொடுத்தால் நான் நிச்சயம் நிரூபிப்பேன் என்றும், ஒரு இடைவேளை முடிந்து வர படத்தோட ரிவெஞ்ச் மோட் போல இருக்கும் எனது ஆட்டம் என பதிவிட்டுள்ளார்.
மேலும், பிக்பாஸ் வீட்டின் 7வது வார தலைவராக தன்னை போட வேண்டும் என்றும், இரண்டு ரெட்கார்டுகளை தனக்கு கொடுக்க வேண்டும் என்றும், அதை தனக்கு எதிராக தவறாக பயன்படுத்திய இருவருக்கு கொடுப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வா தலைவா வா தலைவா என்று மகிழ்ச்சியாக கமெண்டுகளை தட்டி வருகின்றனர்.