என்னதான் திரைப்படங்கள், வெப்சீரிஸ் என்று இருந்தாலும் சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்றளவும் கிராமங்களில் பலரும் காலை முதல் இரவு தூங்கும் வரை சீரியல்களிலேயே மூழ்கின்றனர். சிறு குழந்தை, இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் சீரியல்கள் விரும்பிகளாகவுள்ளனர்.
ஒவ்வொரு டிவியும் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சியாக சன் தான் முதலில் இருந்தது. அதன்பிறகு ஜெயா டிவி, ராஜ் டிவி, பாலிமர் என வந்தது. ஆனால் இப்போதைய நிலைக்கு சன், விஜய் அடுத்து ஜீ தமிழில் தான் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
TRP ரேட்டிங் எடுத்தால் டாப் 5ல் இப்போதெல்லாம் சன் டிவி சீரியல்களும், அடுத்து விஜய் டிவி சீரியல்களும் தான் இடம்பெறுகின்றன.
இந்த நிலையில் தான் பிரபல தொலைக்காட்சியின் ஒரு சீரியல் முடிவுக்கு வருவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் விரைவில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது, அது நமக்கு தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த பேரன்பு என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.