ஒரு படத்தின் வெற்றியை அப்படத்தின் வசூல் தான் தீர்மானிக்கிறது. ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தமான விஷயங்களை அறிந்து கொள்வதில் அலாதி பிரியம். அதுவும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்களும் படங்களின் வசூல் விவரங்களை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
அதுவும் முன்னணி நடிகர்களின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்தந்த முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில், வசூலை பற்றி பேச துவங்குவதில் இருந்து அவர்களுக்குள் சண்டை போட்டு கொள்வது வரை அனைத்து அடங்கும்.
தற்போது இந்தியாவில் இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா-2 படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதுவரை இந்த படம் உலகம் முழுவதும் ரூ.1,705 கோடி வசூலித்து, இந்த ஆண்டுக்கான வசூல் குவித்த படங்களில் முதலிடத்தில் இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த படத்திற்கான ஆதரவு அதிகரித்து வருவதுடன், வசூலில் சாதனை படைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான ‘கல்கி 2898 ஏ.டி.' ரூ.1,200 கோடி வசூலித்து 2-ம் இடத்தில் உள்ளது. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தி படமான ‘ஸ்திரி-2' ரூ.874 கோடி குவித்து 3-ம் இடத்தில் உள்ளது. வெறும் 50 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூலில் வாரிக்குவித்து ஒட்டுமொத்த பாலிவுட்டையும் வாய் பிளக்க வைத்தது.
ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா' ரூ.521 கோடி குவித்து 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இதில் ஜான்வி கபூர், சைப் அலிகான், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.
அதற்கு அடுத்த இடத்தில் விஜய்யின் ‘தி கோட்' ரூ.440 கோடி வசூலித்து 5-ம் இடமும் பிடித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் ஆர்யன்-வித்யாபாலன் நடித்த ‘புல் புலையா-3 ' திரைப்படம் ரூ.417 கோடி குவித்து 6-ம் இடத்தை பிடித்துள்ளது.
‘சிங்கம் அகைன்' (ரூ.389 கோடி) வசூலித்து 7-வது இடத்தில் உள்ளது. இந்த படத்தில் அஜய் தேவ்கன், கரீனா கபூர் கான், அர்ஜுன் கபூர், டைகர் ஷெராஃப், அக்ஷய் குமார், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘ஹனுமான்' (ரூ.350 கோடி), வசூல் செய்து 8-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டது. பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.
(ரூ.344 கோடி) வசூல் செய்து 9-வது இடத்தில் உள்ளது. இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்' படம் ரூ.340 கோடி வசூலித்து 10-வது இடத்தில் உள்ளது.
இந்திய அளவிலான இந்த டாப் 10 பட்டியலில் 'தி கோட்', ‘அமரன்' ஆகிய 2 தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.