உலகளவில் சென்ற ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய திரைப்படங்களில் 8 இந்திய படங்கள் இடம்பிடித்துள்ளன. அதில் விஜயின் இரண்டுப் படங்கள் இடம்பெற்று விஜய் ரசிகர்களுக்குப் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய படங்கள் என்பது பாலிவுட், கோலிவுட், மாலிவுட், டோலிவுட் ஆகியவை இணைந்தவைதான். அதில் வட இந்தியா முழுவதும் பாலிவுட் சினிமாவாகும். ஆனால் அதிகம் பேசப்பட்ட 8 இந்திய படங்களில் மூன்றுப் படங்கள் கோலிவிட் சினிமாவைச் சேர்ந்தப் படங்களாகும். மேலும் இரண்டு பிரபாஸ் படங்கள் மற்றும் மூன்று ஹாலிவுட் படங்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் இடத்தில் விஜயின் 'லியோ' படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் மூன்றாவது இடத்திலும் விஜயின் 'வாரிசு' படம் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'சலார்' படமும் ஆறாவது இடத்தில் பிரபாஸின் 'ஆதிப்புருஷ்' படமும் இடம்பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தைச் சென்ற ஆண்டு வெளியான அஜித்தின் 'துணிவு' படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் ஷாருக்கான் நடிப்பில் ஐந்தாவது, ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களில் 'ஜவான்', 'பதான்' மற்றும் 'துன்கி' ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில் இந்தப் பட்டியலில் பாலிவுட்டைப் பொறுத்தவரை ஷாருக்கான் படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன. அதேபோல் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பிரபாஸ், விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இன்னும் சொல்லப்போனால், சென்ற ஆண்டு ஷாருக்கானுக்கு அந்த மூன்று படங்கள் மட்டுமே வெளியாகின. அதேபோல் அஜித்தின் ஒரு படமும் விஜயின் இரண்டு படங்களும் பிரபாஸின் இரண்டு படங்களும் மட்டுமே சென்ற ஆண்டு அவர்களுக்கு வெளியாகின. இதனையடுத்து அதிகம் பேசப்பட்டப் படங்கள் பட்டியலில் இந்த நான்கு இந்திய ஹீரோக்களின் வெளியான அனைத்துப் படங்களுமே இடம்பெற்றுள்ளன.
இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனையாகவும் பெருமையாகவும் கருதப்படுகிறது. அதேபோல் இந்தப் பட்டியலில் அடுத்த ஆண்டு விஜய், அஜித் பெயர்கள் இடம்பெறுமா என்பது சந்தேகம்தான். ஏனெனில் இவர்கள் இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நிற்பதால் கதை அடிப்படையில் வெற்றிபெறும் படமே அதிகம் பேசப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.