
2023-ல் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கொண்ட திரைப்படங்களின் தரவரிசை பட்டியலில் ரஜினி, விஜய் படங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு இணையதளங்களில் ஒன்றாக திகழும் ஐஎம்டிபி இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டு திரைப்படங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதன்படி இந்நிறுவனம் 2023 ஆம் ஆண்டிற்கான அதிக பார்வையாளர்களை கொண்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ஐ எம் டி பி நிறுவனம் திரையரங்கு மற்றும் ஓடிடி தலங்களில் அதிகப்படியான பார்வையாளர்களைக் கொண்டு விளங்கிய இந்தியாவின் 10 திரைப்படங்களை பட்டியலிட்டு இருக்கிறது. அதில் முதல் இரண்டு இடங்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படங்கள் இடம் பெற்று இருக்கின்றன. தமிழில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டு இருக்கக்கூடிய தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இயக்குனர் அட்லி இயக்கி, ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உள்ளது. 2வது இடத்திலும் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் திரைப்படம் உள்ளது.
அடுத்த இடத்தில் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படமும், அடுத்த இடத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ, ஓ எம் ஜி 2, அதற்கு அடுத்த இடத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம், அதற்கு அடுத்த இடங்களில் கடார் 2, தி கேரளா ஸ்டோரி, தூ ஜீதி மெயின் மக்கர், போலா ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.