2023ம் ஆண்டின் 10 சிறந்த இந்திய கதாநாயகர்களின் பட்டியல் வெளியீடு!

10 best actors 2023
10 best actors 2023

2023ம் ஆண்டிற்கான சிறந்த இந்திய ஆண் நடிகர்கள் பட்டியலை Ormax Stars India Loves என்ற மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒரு மாற்றம் சென்ற ஆண்டுத்தான் இந்திய திரையுலகில் நிகழ்ந்தது. ஆம்! கதாநாயகர்கள் அடிப்படையில் ரசிகர்கள் திரையரங்கில் படம் பார்த்த காலம் மாறி, கதைக்களத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் பார்க்கும் காலம் சென்ற ஆண்டுத்தான் வந்தது. அதனால் இது புது இயக்குனர்களுக்கும் புதுமுக கதாநாயகர்களுக்கும் திரையுலகில் சாதிக்க ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்ட அனுபவம் மிகுந்த கதாநாயகர்கள், இயக்குனரைத் தேர்வு செய்து படத்தில் நடிக்காமல், கதைகளத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகமொத்தம் திரையுலகின் வளர்ச்சி ரசிகர்களால் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. அந்தவகையில் Ormax மீடியாவின் சிறந்த கதாநாயகர்கள் பட்டியலைப் பார்ப்போம்.

1. ஷாருக்கான்: ஷாருக்கான் சென்ற ஆண்டு பதான், ஜவான் ஆகிய படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இயக்குனர் அட்லீயுடன் கைக்கோர்த்ததால் தென்னிந்திய சினிமாவும் வட இந்திய சினிமாவும் சமமான எதிர்ப்பார்ப்பு வைத்தனர். ஆகையால் அப்படமும் ஷாருக்கானும் மாபெரும் ஹிட் கொடுத்தனர் என்றே கூற வேண்டும்.

2. விஜய்: லோகேஷ் கனகராஜும் விஜய்யும் சேர்ந்த லியோ என்ற ஒரு படமே போதுமே சிறந்த கதாநாயகன் இடத்தில் இரண்டாம் இடத்தைப் பிடிக்க.

3. பிரபாஸ்: சென்ற ஆண்டு ராமனாக நடித்த ஆதிப்புருஷ் படமும் பிரசாந்த் நீலுடன் இணைந்து வெளியான சலார் படமும் பிரபாஸ் நடிப்பை தூக்கிவிட்டது என்றே கூறலாம்.

4. அஜித் குமார்: அஜித்தின் துணிவு படத்தின் எதிர்ப்பார்ப்பும் அவருடைய அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அஜித் நன்காம் இடத்தைப் பிடிக்க காரணமானது.

5. சல்மான் கான்: சல்மான் கானின் YRF universe இன் டைகர் படமும் பதானில் கேமியோ ரோலுமே இந்திய ரசிகர்களை பூர்த்தி செய்துவிட்டது.

6. அக்ஷய் குமார்: அக்ஷய் குமாரின் செல்ஃபி, Beautiful disaster, OMG 2 மற்றும் Mission Raniganji ஆகிய படங்கள் வட இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அளவுக்கு அதிகமாகவே பூர்த்தி செய்தன.

7. ஜூனிய என்டிஆர்: சென்ற ஆண்டு ஜூனியர் என்டிஆர் படங்கள் வெளியாகவில்லையென்றாலும் பான் இந்தியா படமான தேவாரா படத்தின் அப்டேட்களே இந்திய முழுவதும் என்டிஆரை கொண்டாட செய்தது. படம் மட்டும் வந்திருந்தால் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

8. அல்லு அர்ஜுன்: அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமான சக்ராவும் மற்றும் புஷ்பா படத்தின் விருதுகளும், புஷ்பா 2 படத்தின் அப்டேட்களுமே 2023ம் ஆண்டின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது.

9. ராம் சரன்: ராம் சரனின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் க்ளோபல் ஸ்டார் விருதில் சிறந்த ஹீரோ என்ற விருது வாங்கி பெருமைப் படுத்தினார். அதேபோல் RRR படத்திற்காகவும் பல உயரிய விருதகளையும் வாங்கி நாட்டை பெருமைப் படுத்தினார்.

இதையும் படியுங்கள்:
இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸை.. மாஸ் லுக்கால் ரசிகர்கள் குஷி!
10 best actors 2023

10. சூர்யா: சென்ற ஆண்டு சூர்யாவின் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் கங்குவா படத்தின் புதிய லுக் மற்றும் அப்டேட் நல்ல வரவேற்பைப்பெற்றது. அதேபோல் அப்படத்திற்காக அவர் செய்த கடின உழைப்புமே இந்த பட்டியலில் இடம்பெற காரணமாக அமைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com