தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய படம் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை. சென்னை, கோவா உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம் பெற்ற விடுதலை திரைப்படம் பல்வேறு தரப்பினரை கவர்ந்தது. உண்மை சம்பவங்களின் தழுவல்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் விழாக்களில் அதிகம் பேசப்படும் படமாக இருந்தது.
அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி மிக சிறந்த மனிதம் போற்றும் படமாக வரவேற்பை பெற்றது. சென்னை, கோவா பல நகரங்களில் நடை பெற்ற, நடைபெற்று கொண்டிருக்கும் திரைப்பட விழாக்களில் அயோத்தி திரைப்படம் தவறாமல் இடம் பெற்று விடுகிறது.
கேரளாவை புரட்டி போட்ட 2018 ஆம் ஆண்டு பெரு மழையை மைய்யப்படுத்தி இந்த ஆண்டு வெளியான 2018 திரைப்படம் பல்வேறு பட விழாக்களில் இடம் பெற்றதோடு மட்டுமில்லாமல் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படமாகவும் இருக்கிறது. ஜூட் அந்தணி ஜோசப் இயக்கிய இப்படம் பேரிடர் காலங்களில் ஒற்றுமையின் அவசியத்தை சொல்லும் படமாக அமைந்தது இப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுமிக்கு நடைபெற்ற பாலியல் வன்முறையை கருவாக கொண்டு To Kill a Tiger ஆவணப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. மேலும் ஆஸ்கர் ஆவணப் பட பிரிவில் சிறந்த ஆவண படமாக இந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிஷா பகுஷா இப்படத்தை தயாரித்து இயக்கிஉள்ளார்.
விது வினோத் சோப்ரா தயாரித்து இயக்கி வெளிவந்த 12th Fail திரைப்படம் காவல் துறை உயரதிகாரி ஒருவரின் வாழ்வில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.டெல்லி, மும்பை, கோவா சென்னை உட்பட பல நகரங்களில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் 12th Fail திரைப்படம் திரையிடப்பட்டது.
தன் பாலின ஈர்பை மைய்யப்படுதிய காதல் தி கோர் திரைப்படம் கோவா திரைப்பட விழாவில் திரையிடப் பட்டது. இப்படியும் ஒரு வாழ்வியல் படமா? என வியந்த இந்த படத்தை தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை இயக்கிய ஜிஜோ பேபி இயக்கி இருந்தார்.படத்தில் பேச ப்பட்ட விஷயத்திற்காக சில இஸ்லாமிய நாடுகளில் இப்படம் திரையிட மறுக்கப்பட்டது.