இந்த வருடம் மே மாதத்தில் வெளிவந்த படம் குட் நைட் இப்படத்தின் அறிமுக இயக்குனர் வினயக் சந்த்ரசேகரன். பல நாள் சினிமா துறையில் வளர்ச்சி பெற போராடிக் கொண்டிருந்த மணிகண்டனுக்கும் இப்படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. அதேபோல் அனு என்ற கதாப்பாதிரத்தில் கதாநாயகியாக மீத்தா ரங்கநாத் நடித்தார்.
இந்த அனு கதாப்பாத்திரம் இன்னும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது. குறட்டை விடும் கணவனுக்கும் அதனை சரி செய்வதற்கு துணை நிற்கும் மனைவிக்கும் இடையில் அழகான காதலில் படம் நகரும். இது ஒரு எளிதான கதைகளம் ஆயினும் கதை நகர்வை வினயக் சிறப்பாக செய்திருப்பார்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சரத் குமார் நடித்த படம். இப்படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படம். சரத்குமாரின் அனுபவமும் அசோக்கின் புத்தக அறிவும் சேர்ந்துதான் அந்த சைக்கோ கொலையாளியை கண்டுப்பிடிப்பார்கள். யார் குற்றவாளி என்று கண்டுப்பிடிப்பதை பல திருப்புமுனைகள் வைத்து, ரசிகர்களின் கவனைத்தை படத்தைவிட்டு திசைத் திருப்பாமல் வைத்திருப்பார் இயக்குநர் விக்னேஷ்.
காளி வெங்கட், பூ ராமு நடித்த கிடா படத்தை இயக்கியவர் ரா.வெங்கட். பேரனின் ஆசையை நிறைவேற்ற வறுமையில் இருக்கும் தாத்தா என்ன செய்கிறார் என்பதை அசலான வாழ்க்கை மூலம் காண்பித்திருந்தார் படத்தில்.
கனேஷ் கே பாபு இயக்கத்தில் கவின் நடித்த இப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படம் ஒரு அழகான காதல் கதை. அப்பா மகன் பாசத்தை பாதி படம் முழுவதும் காண்பித்து இறுதியில் ஒரே காட்சியில் அம்மா மகன் பாசத்தை தெவிட்ட தெவிட்ட காண்பித்து அசத்தியிருப்பார் கனேஷ். இது கவின் கெரியரைத் தூக்கி விட்ட ஒரு படம்.
விதார்த், யோகிபாபு நடித்த ‘குய்கோ’ படத்தை இயக்கிய அருள் செழியன், பிரீஸர் பாக்ஸ் பின்னணியில், ஒரு காமெடி கதையை அழகாகச் சொல்லியிருந்தார், இந்தப் படத்தில். யதார்த்தம் மீறாத அந்தப் படத்தை வெறும் காமெடி என்று கடந்துவிட முடியாது.
ஏப்ரல் மாதத்தில் வெளியான இத்திரைப்படத்தின் இயக்குனர் தரணி இராசேந்திரன். இப்படம் ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரனதீரன் பாண்டியனின் கதை. ரனதீர பாண்டியனுக்கும் கிராமத்தை காக்க நினைக்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டம். இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சி செய்திருப்பார்கள். ஆடை, நடை, பாவனை, அனைத்தும் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்களின் வாழ்க்கை நிலை போலவே இருக்கும்.
கிராமத்து உறவுகளையும் சுயநல மனங்களையும் ‘தண்டட்டி’ வழியே கலகலப்பாகச் சொன்னவர், ராம் சங்கையா. இந்தப் படத்தில் பசுபதி, ரோகினி உட்பட அனைவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.
எஸ்.ஹரிஹரன் இயக்கிய இத்திரைப்படம் நவம்பர் மாதம் வெளியானது. ரியோக்கும் இது ஒரு கைக்கொடுத்த படமே. இது ஒரு அழகான காதல் கதை. இப்படத்தில் திருப்புமுனைகளையும் உணர்வுகளையும் சிறப்பாக காண்பித்திருப்பார் இயக்குனர்.