இந்த வாரம் தியேட்டரில் வரிசைக்கட்டி நிற்கும் படங்கள் லிஸ்ட் இதுதான்!

படங்கள்
படங்கள்

தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்கள் என்று ஏராளமானோர் உள்ளனர். என்னதான் வீட்டில் டிவி பார்த்தாலும் தியேட்டரில் பார்ப்பது போல் வருமா என கேட்பார்கள். இவர்களுக்காகவே இந்த வாரம் வரக்கூடிய படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் ஏராளமான பெரிய படங்கள் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது பிப்ரவரி மாதம் வரிசையாக பெரிய பட ரிலீசுக்காக காத்திருக்கிறது.

வடக்குப்பட்டி ராமசாமி:

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 2ந் தேதி திரை காண உள்ளது.

டெவில்:

ஆதித்யா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் டெவில். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் வித்தார்த், பூர்ணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார் இயக்குனர் மிஷ்கின். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை இளையராஜா கவனித்துள்ளர். இப்படம் பிப்ரவரி 2-ல் ரிலீஸ் ஆக உள்ளது.

மறக்குமா நெஞ்சம்:

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் மறக்குமா நெஞ்சம். பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் தீனா, பிராங்ஸ்டர் ராகுல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரா.கோ யோகேந்திரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு சச்சின் வாரியர் இசையமைத்து உள்ளார் இப்படமும் பிப்ரவரி 2ந் தேதி திரைக்கு வருகிறது.

சிக்லெட்ஸ்:

முத்து இயக்கத்தில் இளம் நடிகர், நடிகைகள் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் சிக்லெட்ஸ். பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கொலஞ்சி குமார் பணியாற்றி உள்ளார். விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படமும் பிப்ரவரி 2-ந் தேதி திரைக்கு வர உள்ளது

லவ்வர்:

இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள ‘லவ்வர்’ (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் மணிகண்டன் நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியாக உள்ளது.

லால் சலாம்:

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’ திரைப்படம். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com