பொங்கலுக்கு இத்தனை படங்கள் ரிலீஸாகுதா?

படங்கள்
படங்கள்
Updated on

பொங்கலுக்கு வெளியாகும் படங்களின் பெயர்களை பார்க்கலாம்.

பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே மக்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். வேலையானாலும், பள்ளி, கல்லூரிகள் ஆனாலும் விடுமுறை அளிக்கப்படும். இதனால், மக்கள் குடும்பத்தோடு குதூகலிக்க விரும்புவார்கள். தியேட்டர், கடற்கரை, பார்க் என பொது இடங்களுக்கு செல்வார்கள்.

இதற்காக தான் பல முன்னணி நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கலுக்கு ரிலீசாகிறது. வருடா வருடம் பெரிய நடிகர்களின் 2,3 படங்கள் ரிலீஸாகும். இதனால் ஏதாவது ஒரு படம் ஹிட்டடிக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி இந்த வருடம் என்னென்ன படங்கள் வெளியாகும் என்று பார்க்கலாம்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வரும் 12ஆம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ், மகேஷ்பாபுவின் குண்டூர் காரம், சிவகார்த்திகேயனின் அயலான், அருண்விஜய்யின் மிஷன் சாப்டர் ஒன், தேஜா சஜ்ஜாவின் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன.

இந்த 6 படங்களின் ட்ரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஒன்றாக ஒரே நாளில் போட்டியிடுகிறது. இதில் அதிக வெற்றி எந்த படம் பெறும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கோலிவுட்டில் கேப்டன் மில்லர், அயலான் படத்திற்கு அதிக எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ஆக்‌ஷனை விரும்பும் ரசிகர்கள் கேப்டன் மில்லருக்கும், குடும்பத்தோடு எண்டர்டெயின் செய்ய நினைப்பவர்கள் அயலான் திரைப்படத்திற்கும் செல்வார்கள். இது தவிர மற்ற படங்கள் பான் இந்தியா படமென்பதால் எதிர்பார்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் மாறாலாம். எதுவானாலும் வரும் 12ஆம் தேதி தான் தெரியவரும்.

logo
Kalki Online
kalkionline.com