படிக்கட்டில் தவறி விழுந்து 29 வயது பிரபல நடிகை மரணம்!

படிக்கட்டில் தவறி விழுந்து 29 வயது பிரபல நடிகை மரணம்!
Updated on

பல படங்களில் நடித்து, தன்னை பிரபல நடிகையாக மாற்றிக்கொண்டவர் 29 வயதான, கொரியா திரையுலக நடிகை பார்க் சூ ரியன். இந்நிலையில், வீட்டின் மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரிய திரையுலகின் பிரபல நடிகை பார்க் சூ ரியன். இவர் 'ஸ்னோ டிராப்' படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். இவர் தனது வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதனால் அடிபட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்களால் இவரைக் காப்பாற்ற முடியாமல் போனது. கீழே விழுந்ததின் காரணமாக, அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால்தான் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

29 வயதே ஆன இளம் நடிகை திடீரென உயிரிழந்த சம்பவம், அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இழப்பு திரையுலகினரை பெரிதும் பாதித்த நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நடிகையின் குடும்பத்தினர் அவரது உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com