ஒரு பாடல் அமைக்க 400 டியூன்கள் நிராகரிக்கப்பட்டு இறுதியாக உருவாக்கப்பட்டதுதான் எம்.எஸ்.வியின் இந்தப் பாடல்.
ஒரு படம் உருவாகி வெற்றிபெற பாடல் முக்கிய பங்கு வகிக்கிறது. படம் நன்றாக இருந்தும், பாடல் சரியில்லை என்றால் அது மிகப்பெரிய மைனஸாகவே இருக்கும். ஒரு பாடலை படக்குழுவில் உள்ள அனைவருக்கும் திருப்திகரமாக எடுப்பதில் எவ்வளவு சிரமம் இருக்கும் என்பதை உணர்த்தும்விதமாக உருவானதுதான் எம்.எஸ்.வியின் ஒரு பாடல். ஆகையாலே இந்தப் பாடல் இன்றைய தலைமுறையினர்களுக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது.
காலத்தால் அழியாமல் இருக்கும் இந்தப் பாடலின் மேக்கிங் பற்றி முதலில் பார்ப்போமா?
கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி இருவரும் சேர்ந்து பல படங்களில் வேலை செய்திருக்கின்றனர். அந்தவகையில் இயக்குநர் ஸ்ரீதர் தன்னுடைய படத்திற்கு ஒரு ஹிட் பாடல் வேண்டும், அந்தப் பாடல் காலத்தால் அழியாதப் பாடலாக இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உடனே, கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் சேர்ந்து ஒரு டியூன் போட்டு பாடலை கொடுத்திருக்கின்றனர். ஆனால், இயக்குநருக்கு பிடிக்கவில்லை. இயக்குநரின் வார்த்தைகள் நினைவுக்கூறப்பட்டது. அதாவது காலத்திற்கும் அழியாத பாடல் என்ற வார்த்தைகள்.
உடனே கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் சேர்ந்து இரண்டு மாதங்களாக ஏறதாழ 400 டியூன்கள் போட்டிருக்கின்றனர். ஒரு டியூன் கண்ணதாசனுக்கு பிடித்தால் எம்.எஸ்.விக்கு பிடிக்கவில்லை. இன்னொரு பாடல் எம்.எஸ்.விக்கு பிடித்தால் கண்ணதாசனுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இருவருக்கும் பிடித்தால் இயக்குநருக்குப் பிடிக்கவில்லை.
இப்படியே போய் 400 டியூன்கள் அமைக்கப்பட்டன. ஆனால் திருப்திகரமானதாக இல்லை. அப்படி ஒருமுறை இறுதியாக ஒரு பாடல் உருவானது. அந்த ட்யூனை இருவரும் முடிவு செய்துவிட்டு, இயக்குநரிடம் கொண்டு சென்றனர். அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இந்தப் பாடல் 1963-ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் இடம்பெறும் பாடல். கல்யாண் குமார், தேவிகா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி ராமமூர்த்தி இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.
ஆம்! அது
“நெஞ்சம் மறப்பதில்லை… அது நினைவை இழக்கவில்லை… நான் காத்திருந்தேன்… உன்னைப் பார்த்திருந்தேன்… கண்களும் மூடவில்லை…”
என்ற மெலோடி பாடல்தான்….