காளிதாஸ்
காளிதாஸ்

நடிகர் அஜீத்துக்கு தேனியில் 6 அடி உயர சிலை!

Published on

நடிகர் அஜித்தின் ‘துணிவு’  திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில், தேனியில் அவரது ரசிகர் ஒருவர் புதியதாக உணவகம் தொடங்கி, அதில் ஆறடிக்கு  சிலை வைத்துள்ளார்.

தேனி மாவட்டம் சின்னமனூரில் நடிகர் அஜீத்தின் தீவிர ரசிகரான காளிதாஸ் என்பவர் ஒரு ஓட்டல் நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அஜீத் நடித்து வெளியாகவுள்ள ‘துணிவு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதும், அதைக் கொண்டாடும் வகையில் தன் ஓட்டலில் சாப்பிட வருவோருக்கு அன்று 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கி அசத்தினார்.

இந்நிலையில் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா.. சில்லா’ பாடல் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனதைத் தொடர்ந்து காளிதாஸ் தன் ஓட்டலின் 2-வது கிளையை தேனியில் தொடங்கியுள்ளார். மேலும் ஓட்டல் வாசலில் நடிகர் அஜீத்தின் 6 அடி உயர சிலை ஒன்றையும் காட்சிக்கு வைத்துள்ளார். இச்சிலை அப்பகுதி மக்களை வெகுவாக  கவர்ந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com