69ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த நல்லாண்டி தாத்தாவிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வெளியான சில நாட்களில் அவர் உயிர் பிரிந்த நிலையில் அவருக்கு இந்த சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பிரிவில் சிறந்த தமிழ் படமாகும் கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று சிறந்த தெலுங்கு திரைப்படமாக உப்பெனா திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழிகளுக்கான பிரிவில் சிறந்த மலையாள திரைப்படமாக ஹோமும், அந்த கன்னட திரைப்படமாக சார்லி 777 திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டது.
மேலும், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் சிறந்த ஒட்டுமொத்த பொழுதுபோக்கு திரைப்படம் என்ற விருதை வென்றதோடு சண்டை பயிற்சி, ஸ்பெஷல் எபக்ட்ஸ், நடனம் உள்ளிட்ட பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.
இதுதவிர சிறந்த பாடகியாக இரவின் நிழல் படத்திற்காக ஸ்ரேயா கோஷலுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இவை மட்டுமே நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு விருதாக வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தில் நடித்ததற்காக தட்டி சென்றார்.
மலையாள திரைப்படமான நயட்டி படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
நடிகைக்கான விருதினை கங்குபாய் திரைப்படத்தில் நடித்த ஆலியா பட் வென்றார். சிறந்த திரைப்படமாக நடிகர் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி திரைப்படம் தெரிவு செய்யப்பட்டது.
மேலும் பாடல்களுக்கான சிறந்த இசையமைப்பாளர் விருதினை புஷ்பா திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசைக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை கீரவாணி RRR விஜய் படத்திற்காகவும் வென்றுள்ளனர்.
கருவறை என்ற குறும்படத்திற்கு இசை அமைத்ததற்கு ஸ்ரீகாந்த் தேவாவுக்கும் விருது கிடைத்துள்ளது.
சிறந்த பாடகிக்கான விருதினை இரவின் நிழல் திரைப்படத்தில் பாடிய ஸ்ரேயா கோஷலும், சிறந்த பாடகர் விருதினை RRR படத்தில் குமரம் பீமனும் பாடலை பாடிய கால பைரவனும் வென்றுள்ளனர்.