80ஸ் நடிகை ஜீவிதா தமிழில் ரீ எண்ட்ரி! இந்தப் படத்திலா?

80ஸ் நடிகை ஜீவிதா தமிழில் ரீ எண்ட்ரி! இந்தப் படத்திலா?

இளையராஜாவின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று ‘நான் தேடும் செவ்வந்திபூ இது, ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது’… இந்தப் பாடலை நம்மால் மறக்கவே முடியாது. சரி பாடலைப் பற்றி இப்போது ஒன்றும் சொல்லப் போவது இல்லை. அந்தப் பாடலில் கார்த்திக்குடன் நடனமாடுவாரே அவர் தான் நடிகை ஜீவிதா. தெலுங்கில் அவர் பயங்கர பாப்புலர். ஜீவிதாவின் கணவர் ராஜசேகரும் கூட தமிழில் சில படங்களில் நடித்திருக்கிறார். இருவருமே ஆரம்பத்தில் தமிழில் தான் எண்ட்ரி ஆனார்கள், ஆனால்… இருவருக்குமே கோலிவுட் அத்தனை சமர்த்தாக கை கொடுக்கவில்லை. எனவே கால் நூற்றாண்டுக்கு முன்பே அக்கடபூமியில் செட்டில் ஆகி விட்டார்கள்.

அங்கு ராஜசேகரின் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ஜீவிதா, தமிழில் நாயகியாக நடித்த அளவுக்கு கூட தெலுங்கில் நிறைய படங்களில் நடித்ததாகத் தெரியவில்லை. கணவர் சூப்பர் ஸ்டாராக வசூலில் கலக்கிக் கொண்டிருந்ததால் சொந்த பேனரில் திரைப்படங்களை எடுத்து தன்னை ஒரு தயாரிப்பாளராகக் களமிறக்கிக் கொண்டார் ஜீவிதா. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருமே அப்பா பாணியில் மருத்துவம் படித்து முதலில் டாக்டர்கள் ஆகி விட்டார்கள். இனி நடிப்பில் இறங்குவார்களா? என்று தெரியவில்லை. ஆனால் ஜீவிதா மீண்டும் ரீ எண்ட்ரி கொடுக்கத் தயாராகி விட்டார். நேரடித் தெலுங்குப் படத்தில் இல்லை. தமிழ் படத்தில்.

ஆம், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தான் ஜீவிதா ரீ எண்ட்ரி தரவிருக்கிறார். இத்திரைப்படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் நாயகர்களாக நடிக்க சூப்பர் ஸ்டார் கெளரவ வேடத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் ரஜினிக்குத் தங்கையாக ஜீவிதா நடிக்கவிருப்பதாகத் தகவல்.

லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 7 ஆம் தேதி சென்னையில் தொடங்கவிருப்பதாகத் தகவல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com