கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்!

டிஷ்யூம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தவர் கின்னஸ் பக்ரு, இவர் மலையாளத்தில் உருவாகும் ’196 குஞ்சூசுட்டான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

தோற்றம் தடையில்ல என்பதை நிரூபித்துக்காட்டி முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் அஜய் குமார் என்கிற கின்னஸ் பக்ரு. இவர் தமிழில் அற்புதத் தீவு, டிஷ்யூம், காவலன் என்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மலையாளத் திரை உலகில் முன்னணி குணச்சித்திர நடிகராகவும் வலம் வருகிறார்.மேலும் மலையாளத்தில் குட்டியும் கோலும் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இது மட்டுமல்லாது உலகின் குறைந்த உயரம் கொண்ட நடிகர், இயக்குனர் என்ற கின்னஸ் விருதையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆர்யன் விஜய் இயக்கும் மலையாளத் திரைப்படத்தில் கின்னஸ் பக்ரு கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கான படபிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது. இந்த படத்திற்கு ’196 குஞ்சூசுட்டான்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் டைட்டில் போஸ்டரை மோகன்லால் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் பலரும் நடிக்க உள்ளனர். காமெடி படமாக உருவாக உள்ளது. மேலும் தமிழிலும் இப்படம் டப் செய்யப்படவுள்ளது. படத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com