லவ்வர்ஸ் டே ஸ்பெஷல்.. 96 படம் ரீ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!

96 Moive
96 Moive

சிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிப்பெற்ற 96 திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.

புது படங்கள் வரவேற்பை பெற்று வரும் நிலையில் ரீ ரிலீஸ் கலாச்சாரமும் டிரண்டாகி வருகிறது. ரஜினியின் பாபா, முத்து, கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு, ஆளவந்தான் படங்கள் தான் இந்த ட்ரெண்டை தொடங்கி வைத்தன. இதனால் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படமும் ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல் தனுஷின் 3, மயக்கம் என்ன படங்களும் சமீபத்தில் மீண்டும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இதே போன்று தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு 96 திரைப்படம் தமிழகம் முழுவதும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. பள்ளி பருவ காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் காதலர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

இயக்குநர் ப்ரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான படம் ‘96’. பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது.

இதையும் படியுங்கள்:
காண்போரைக் கட்டியிழுக்கும் கானாடுகாத்தான் அரண்மனை!
96 Moive

ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரசிகர்களின் வரவேற்பின் காரணமாக ரூ.50 கோடி பட்ஜெட்டை தாண்டி வசூலித்தது.இந்த படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com