நாளை வெளியாகிறது விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட்... என்னாவா இருக்கும்?

Vidamuyarchi
Vidamuyarchi

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. இதனையடுத்து என்ன அப்டேட் என்றுப் படக்குழு இன்னும் அறிவிக்காததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் ஹேஷ்டேக் X தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய துணிவு படம் சென்ற ஆண்டு ஜனவரி மாதம் வெளியானது. அதே நேரத்தில்தான் விஜயின் வாரிசு படமும் வெளியானது. அதனையடுத்து விஜயின் லியோ படம் சென்ற ஆண்டே வெளியானது. ஆனால் துணிவு படத்திற்குப் பின் அஜித் படத்தின் அப்டேட் மட்டுமே வெளியாகியிருந்தது. அஜித்தின் அடுத்தப் படமான விடாமுயற்சி கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகப் பல இன்னல்களைத் தாண்டி உருவாகி வருகிறது. கலை இயக்குனரின் இறப்பு, த்ரிஷாவின் கால் ஷீட் கிடைக்காதது, சமீபத்தில் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எனத் தொடர்ந்து தடங்கல் வந்துக்கொண்டே இருந்தன. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருந்து வந்தனர்.

அதற்கு ஒரு முடிவுக்கட்டதான் நாளை படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமலேயே இணையத்தை விடாமுயற்சி படம் ஆட்கொண்டுவிட்டது.  நாளை அறிவிக்கப்போகும் அப்டேட்டிற்கான முன்னறிவிப்பு போஸ்டர் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.

நிரவ் ஷா ஒளிப்பதிவில் அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில் சில காரணத்தினால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. மேலும் இந்த படம் இந்தாண்டு திபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தொழிலதிபரை திருமணம் செய்த ‘அன்பே ஆருயிரே’ கதாநாயகிக்கு குவியும் வாழ்த்துகள்!
Vidamuyarchi

லியோ படத்தைப் போல வெளியீட்டு தேதியை அறிவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கூட்டுவிட்டுப் படத்தை சற்றுத் தாமதமாக வெளியீடும் யுக்தியைப் படக்குழு பயன்படுத்தப் போகிறதா? என்று கேள்வி எழுந்துள்ளது.

முதலில் விடாமுயற்சி படம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் படப்பிடிப்பே இன்னும் முடிக்கவில்லை. அஜித் ஒரு படத்திற்கு ஒன்றரை வருடம் எடுத்துக்கொண்டது இதுவே முதல்முறை. இனி ஒரு படத்திற்கு இவ்வளவு இடைவெளியையே அஜித் எடுத்துக்கொள்வார் என்றே கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com