பிக்பாஸ் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்.. கார் டிரைவர் கைது!

ஷெரின் சாம்
ஷெரின் சாம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் சினிமாவில் நடித்துள்ள நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த, அவரது டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் வினோதய சித்தம் திரைப்படத்தில் நடத்தவர் 38 வயதான நடிகை ஷெரின் சாம். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னை ராயப்பேட்டையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரிடம் கார் ஓட்டுநராக மயிலாடுதுறையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பணியாற்றி வந்தார். தினசரி நடவடிக்கை சரியில்லை என்றும், ரவுடி ஒருவரின் தம்பி என்று தெரியவந்ததன் பேரிலும், கார்த்திக்கை ஓட்டுநர் பணியில் இருந்து ஷெரின் நீக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக், தனது நண்பர் இளையராஜாவுடன் சேர்ந்து மதுபோதையில் ஷெரினின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றதாகவும், பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் 'உன்னையும் உன் அண்ணனையும் கழுத்த அறுத்து கொலை செய்து விடுவேன்' என்று ஷெரினின் வாட்ஸ் எண்ணிற்கு, ஆடியோ அனுப்பி கார்த்திக் மிரட்டல் விடுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஷெரினின் சகோதரரான கெளரி ஜனார்த்தன், அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் அத்துமீறி நுழைதல், ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் டிரைவர் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் இளையராஜாவை தேடி வந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கின் நண்பர் இளையராஜா, கடந்த 25ஆம் தேதி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான டிரைவர் கார்த்திக், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, சென்னை அண்ணாசாலை போலீசார் அவரை மயிலாடுதுறையில் இருந்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து கார்த்திக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com