Releasing on November 2115 !! : 100 வருடங்களுக்கு பிறகு பார்ப்பதற்காக 2015ல் எடுக்கப்பட்ட படம்! என்னங்கடா இது?

100 years movie
100 years movie
Published on

2015ல் எடுக்கப்பட்ட இந்த படத்தை உலகத்தில் இதுவரை ஒருவரும் பார்த்ததில்லை. இந்த படம் வெளிவரும் போது அதை பார்க்க நாம் உயிரோடு இருக்க மாட்டோம். அப்படி என்ன படம் அது? அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிரான்ஸ் நாட்டில் Remy martin என்ற  மதுபானம் தயாரிக்கும் கம்பெனி இருக்கிறது. இந்த கம்பெனி தயாரிப்பதிலேயே மிகவும் விலையுயர்ந்த பிரத்யேகமான ஒருவகை மதுபானம் இருக்கிறது. அதற்கு பெயர் Louis 13 cognac. 17 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸை louis 13 என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். இந்த பிரத்யேகமான மதுபானத்தை அவர் தான் அங்கிகரித்தார் என்பதால் அவர் பெயரையும், அந்த இடத்துடைய பெயரையும் சேர்த்து Louis 13 cognac என்று பெயர் வைத்தார்கள்.

இந்த மதுபானம் மட்டும் ஏன் விலையுயர்ந்ததாக இருக்கிறது என்றால், இந்த மதுவை தயாரிக்க பழங்கள் மற்றும் இதர விஷயங்களை ஒரு பீப்பாயில் போட்டு பதப்படுத்துவார்கள். இந்த மதுபானத்தை 40 முதல் 100 வருடங்கள் பதப்படுத்துவதால் தான் இதற்கு இவ்வளவு மதிப்பு. நூறு வருடங்களுக்கு பிறகு வரப்போகும் வாடிக்கையாளர்களுக்கு இப்போதே பொருளை தயாரிக்கிறார்கள். இதே கான்செப்டை வைத்து இந்த கம்பெனி தயாரித்த குறும்படம் தான் 100 Years.

இந்த படத்தில் புகழ்பெற்ற அமேரிக்க நடிகரான John Malkovich நடித்திருக்கிறார். Robert Rodriguez என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 2015 ல் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். இந்த படத்தின் முதல் காப்பி பிரான்ஸில் உள்ள லூயி நிறுவனத்துடைய பாதாள அறையில் புல்லட் ப்ரூப் கண்ணாடியில் ஹைடெக் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பெட்டி 100 வருடங்கள் கழித்து அதாவது 2115 ஆம் வருடம் தானாகவே திறப்பது போல செட் செய்து வைத்துள்ளனர்.

இந்த படத்தின் கதை என்னவென்று யாருக்குமே தெரியாமல் டாப் சீக்ரெட்டாக இருக்கிறது. இவர்கள் தயாரிக்கும் மதுபானம் போலவே இந்த படமும் 100 வருடங்களுக்கு பிறகு வரவிருக்கும் வாடிக்கையாளர்களுக்காகவாம். இந்த படத்தை முதலில் பார்ப்பதற்கு 1000 சிறப்பு விருந்தினர்களுக்கு உலோகத்தால் ஆன டிக்கெட்களை இப்போதே கொடுத்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ஆஸ்கரை நோக்கி தமிழ்த் திரையுலகம்..! ஆஸ்கர் விருதுக்கு செல்லும் 2 தமிழ்ப் படங்கள்..!
100 years movie

ஏன் உலோகத்தால் என்றால், 100 வருடம் கழித்து செல்லரித்து போகாமல் இருப்பதற்காகவாம். அதை அவர்களுக்கு பின்னால் வரும் சந்ததியினர் பார்க்கலாம். இந்த படத்தினுடைய டிரெயிலர் யூட்யூப்பில் இருக்கிறது. டிரெயிலர் முடியும் போது Releasing on November 2115 என்று போடுகிறார்கள். டிரெயிலரில் வரும் எந்த காட்சியும் படத்தில் இருக்காது என்றும் சொல்கிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com