தலைய சுத்துதடா சாமி! டெல்லியில் 'புஷ்பா 2: தி ரூல்' ஒரு டிக்கெட் விலை 2600 ரூபாயாமே!

Pushpa 2: The Rule
Pushpa 2: The Rule
Published on

அல்லு அர்ஜூன் கதாநாயகனாக நடிக்கும் புஷ்பா 2: தி ரூல் வெளியாகும் முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் முந்தைய பதிப்பான புஷ்பா - தி ரைஸ் (1ஆம் பாகம்) மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதே இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார். பகத்பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரி ஷெகாவத்தாக நடித்துள்ளார். ஶ்ரீ லீலா ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்!

3 வருட காத்திருப்புக்குப் பிறகு அல்லு அர்ஜூனின்  'புஷ்பா தி ரூல்' வெளியாக உள்ளது. 400 கோடி ரூபாய் செலவில் உருவான 'புஷ்பா -தி ரூல்' திரைப்படம் , தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் பெங்காலி மொழிகளில்,  உலகம் முழுவதும் 12000 திரைகளில், ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இது வரலாற்றில் மிகப்பெரிய இந்திய திரைப்படங்களில் ஒன்றாகக் இருக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'புஷ்பா தி ரூல்' ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அதானால் நாட்கள் நெருங்க நெருங்க, அதன் மீது ரசிகர்களின் ஆர்வம் கூடுகிறது.

இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் முதல் பாகமான 'புஷ்பா தி ரைஸ்' பெரிய வெற்றியை பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 'புஷ்பா தி ரூல்' திரைப்பட டிக்கெட் விலை 2600 ரூபாயை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கான முன்பதிவு உலகம் முழுக்க துவங்கியுள்ளது. படத்திற்கான முன்பதிவு நவம்பர் 30ஆம் தேதி துவங்கிய சில மணி நேரங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இருப்பினும், புஷ்பா 2 ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது.

அனைத்து மொழிகளிலும் 'புஷ்பா தி ரூல்' முதல் நாள் மட்டும்  ₹ 22.56 கோடி  ரூபாய்க்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ₹ 9.35 கோடி ரூபாய்க்கு இருக்கைகள் ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் புஷ்பா 2 வது பாகம் வெளியாகும் முன்பே  மொத்த வசூல் ₹ 31.91 கோடி ரூபாய் செய்துள்ளது. 

இத்திரைப்படத்தின் வெளியீட்டு நாளான டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாகவே இது வரை 6,92,507 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.

இந்த படத்தின், தெலுங்கு பதிப்பு மட்டும் ₹10.87 கோடி வசூலித்து, 2.83 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி முன்னணியில் உள்ளது .இந்தி மொழி பதிப்பு ₹7.68 கோடியுடன், 2.68 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. அமெரிக்காவில் 900 திரையில் வெளியாகும் புஷ்பா இது வரை 50,000 டிக்கெட்டுகளை முன்பதிவில் விற்றுள்ளது. இதன் மதிப்பு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள். வெளியீட்டிற்கு பின் புஷ்பா தி ரூல் 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com