நினைவெல்லாம் நீயடா
நினைவெல்லாம் நீயடா

இளையராஜா இசையில் உருவான 'நினைவெல்லாம் நீயடா' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!

இசைஞானி இளையராஜா இசையில் உருவாகி வரும் நினைவெல்லாம் நீயடா படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக உருவாகி வருகிறது "நினைவெல்லாம் நீயடா". லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை, சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிராஜன் கதை திரைக்கதை வசனங்களை எழுதி இயக்கியுள்ளார்.

பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி எல் தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஆன பள்ளி பருவ காதலை மையப்படுத்தி இந்த கதை இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இசைஞானி இளையராஜா எழுத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா முதல் முறையாக பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெறவிருந்த நிலையில் இளையராஜாவின் மகள் மரணமடைந்ததால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளையராஜா பங்கேற்கமாட்டார் எனவும் சொல்லப்படுகிறது. இந்த படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com