
பிரபல இந்தி நடிகரான அமீர்தான் தன் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் அமீர் கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பெரும்பான்மையானவை ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை படைத்திருக்கின்றன. இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தயாரிப்பு நிறுவனங்களும் அமீர்கான் படம் என்றாலே உடனே ஓகே என்று சொல்லி விடுகின்றனர். இந்த நிலையில் அமீர் கான் தற்போது குடும்பத்தோடு நேரம் செலவிட முடிவு செய்திருக்கிறார்.
அமீர்கானின் தாயார் ஜீனத் ஹீசைனுக்கு கடந்த வருடம் மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு நலமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படுகிறது. இதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமீர் கான் தனது தயாரிக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து இருக்கிறார். மேலும் அந்த தனியார் மருத்துவமனைக்கு அருகிலேயே வீடை வாடகைக்கு எடுக்க முடிவு செய்து இருக்கிறார். அந்த வீட்டில் தங்கி தாயின் மருத்துவ சிகிச்சைகளை உடனிருந்து கவனித்துக் கொள்ள அமீர் கான் விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அமீர் கான் தனது குடும்பத்தினருடன் சென்னையில் குடியேற உள்ளாராம். அந்த சிகிச்சை முடிந்து சில காலம் ஓய்வில் இருக்கவும் முடிவு செய்து இருக்கிறார். இதனால் புதிய படங்களை ஒப்புக் கொள்ளவும் தொடர்ந்து மறுத்து வருகிறார். படங்களுக்கான கதையை கேட்கவும் தற்போது அமீர்கான் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் மும்பை திரும்பிய பிறகு அமீர்கான் சிதாரே ஜமீன் பர் என்ற நகைச்சுவை கலந்த ஆக்சன் படத்தில் நடித்த உள்ளாராம்.