ஆட்டத்தை ஆரம்பித்த வைகை புயல் வடிவேலு

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்!
ஆட்டத்தை ஆரம்பித்த வைகை புயல் வடிவேலு

சென்னை : வைகை புயல் வடிவேலு… இவர் பேரை கேட்டால் மட்டுமல்ல, நினைத்தாலே இவர் நடத்த காமெடி காட்சிதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். ஒவ்வொருவர் வீட்டிலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர் வட்டம் உண்டு. குடும்ப ரேஷன் அட்டையில் இவர் பேர் இல்லாத குறை மட்டும்தான். அந்த அளவுக்கு இவர் தன் காமெடி நடிப்பு மூலம் மக்களை கவர்ந்திருந்தார்.

தமிழ் சினிமாவில் வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இவரது நகைச்சுவையான பேச்சு மட்டுமன்றி இவரது உடல் அசைவுகளை பார்த்தாலே போதும் குபீரென்று சிரிப்பு வந்துவிடும்.

 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதில் ஏற்பட்ட சில பல அரசியல் சூழ்ச்சி காரணமாக பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் வடிவேலு.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடித்த “இம்சை அரசன் 23ம் புலிகேசி” படம் 2006ம் ஆண்டு வெறியாகி வெற்றிபெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவானது.

அப் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின் அதன் இயக்குநர் சிம்பு தேவனுக்கும் வடிவேலுவுக்கும் பிரச்னை ஏற்பட்டதால் அப்படம் பாதியிலே நிறுத்தப்பட்டது.

ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் அரசியல் பெரும் புள்ளிகளால் சுமுகமாக முடித்து வைக்கப்பட்டன. 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு (10 ஆண்டுகளுக்குப் பிறகு) வடிவேலு   “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் மூலம் திரும்பவும் தன் காமெடி நடிப்பு மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார்.

 இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு விவேக் பாடல் வரி எழுதி உள்ளார். வடிவேலு பாடியுள்ள இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். “எங்க அப்பாத்தா” என்று தொடங்கும் பாடலுக்கு வடிவேலு அவர் பாணியிலே நடனமாடி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு வடிவேலுவின் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

 இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கம் இந்தப் படத்தை, சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிக்கிறார்.

ஓடிடி

“நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படப்பிடிப்பு  முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தன. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து விரைவில் சென்சார் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரைலரை காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com