கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து:நடிகர் சூர்யாவுக்கு காயம்!

கங்குவா
கங்குவாIntel
Updated on

ங்குவா படப்பிடிப்பின் போது கேமரா விழுந்து நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது கங்குவா திரைப்படம். இத்திரைப்படத்தை யு. வி. க்ரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

மேலும் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரேடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் 38 மொழிகளில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும் ஐமேக்ஸ் மற்றும் 3டி முறையில் படம் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில் சென்னை ஈ வி பி ஃபிலிம் சிட்டியில் சூர்யா நடிக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காட்சிகள் நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது 10 அடி உயரத்தில் இருந்த ரோப் கேமரா 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூர்யா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் லேசான காயமடைந்த சூர்யா சிகிச்சைக்குப் பிறகு ஓய்வெடுத்து வருவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.

சூர்யா நடிக்கும் காட்சிகள் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து படப்பிடிப்பு முடிய மேலும் கால தாமதமாக வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கங்குவா படத்திற்காக அமைக்கப்பட்ட செட்டுகள் மேலும் பல நாட்கள் அதே இடத்தில் இருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதே நேரம் நடிகர் சூர்யாவுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருப்பதாகவும் விரைவில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com