“சவாலை சந்தித்தால்தான் சாதிக்க முடியும்” – ’1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்.

“சவாலை சந்தித்தால்தான் சாதிக்க முடியும்” – ’1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்.
Updated on

ந்தத் துறையிலும் வரும் சவால்களை சந்தித்து அதை வெற்றி கொண்டால் மட்டுமே அத்துறையில் சாதிக்க முடியும். இதற்கு பல வெற்றியாளர்கள் சான்றாக உள்ளனர். சினிமாவில் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயனும் இப்படிப்பட்ட சவால்களை சந்தித்தவர்தான்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் என் எஸ் பொன் குமார் எழுதி இயக்கியுள்ள படம் “1947 ஆகஸ்ட்16” . இப்படம் நிறைவடைந்து. தமிழ் இந்தி தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏப்ரல் ஏழாம் தேதி திரைக்கு வருகிறது.  இப்படத்தில் கௌதம் கார்த்திக், புகழ், புதுமுகம் ரேவதி போன்றவர்கள் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் என்பவர்  இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதிலிருந்து... 

       “ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய “ஏழாம் அறிவு” ஆடியோ வெளியீட்டு விழாவில் சத்யம் தியேட்டர் பின்னால் இருந்து பணியாற்றினேன். அவர் தயாரித்த “எங்கேயும் எப்போதும்” படத்தின் ஆடியோ விழாவில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். பிறகு அவர் தயாரித்த “மான்கராத்தே” படத்தில் ஹீரோவாக நடித்தேன். இப்போது அவர் தயாரிக்கும் பட விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இதே சத்தியம் தியேட்டர் மேடையில் உட்கார்ந்துள்ளேன். ஒருவர் வளர்ந்தால் சந்தோஷப்படுபவர்கள் நிறைய பேரு உள்ளனர். ஆனால் என் கூட இருப்பவர் எப்படியாவது வளர வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மிகவும் குறைவு.

    “வீரம்” படத்தில் அஜித்குமார் சொல்லும் டயலாக் இது “கூட இருக்கிறவனை நாம பார்த்துக்கிட்டா மேலே இருக்கிறவன் நம்மள பாத்துப்பான்”. ஏ. ஆர். முருகதாஸ் தனது உதவி இயக்குனர்களின் கதையை தேர்வு செய்து தயாரிப்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. “1947 ஆகஸ்ட் 16” படம் நமது நாட்டின் சுதந்திரம் பற்றிய கதை. சுதந்திரத்திற்காக நிறைய பேர் கஷ்டப்பட்டு உள்ளனர். அதை தாண்டி ஒரு வலி நிறைந்த விஷயத்தை படத்தில் இயக்குனர் சொல்லியுள்ளார். முதல் படத்தையே வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக தேர்வு செய்துள்ள இயக்குனர், எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறார். சவாலை சந்திக்க ரெடியாக இருக்கிறார் என்றால் அவர் சாதிக்கவும் தயாராக இருக்கிறார் என்று அர்த்தம். 

      கார்த்திக் நடிப்பு தனித்துவமாக இருக்கும். அதேபோல் அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிப்பும் தனித்து வமானது ஒரு பெரிய ஹீரோயின் மகன் என்று எப்போதும் தன்னை அவர் காட்டிக் கொண்டதில்லை. திருமணத்திற்கு பிறகு தான் வாழ்க்கை மாறும் அது ஒரு பொறுப்பு என்றும் சொல்லலாம். நான் ஆரத்தியைத்  திருமணம் செய்து கொண்ட பிறகுதான் எனக்கு தனியாக நிகழ்ச்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருமணம் தான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும். கௌதம் கார்த்திக்கிற்கு பத்து தல, மற்றும் 1947 ஆகஸ்ட் 16 ஆகிய படங்கள் திரைக்கு வருவது மஞ்சிமா மோகனை திருமணம் செய்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களாக பார்க்கிறேன்.”

     இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். ஏ. ஆர். முருகதாஸ், கௌதம் கார்த்திக், புதுமுகம் ரேவதி இசையமைப்பாளர் மற்றும் படக் குழுவினர் பங்கேற்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com