
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளும், ’விருமன்’,’மாவீரன்’ ஆகிய படங்களின் நாயகியுமான நடிகை அதிதி ஷங்கர் அடிப்படையில் ஒரு மருத்துவர். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவர், சமீபத்தில் மருத்துவ உடையில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது பல விளம்பரங்களில் மாடலாகவும் நடித்து வருகிறார். மேலும் சில திரைப்படங்களிலும் தற்போது கதாநாயகியாக நடித்து வரும் அதிதி ஷங்கர் டாக்டர் உடையில் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதிதி சங்கர் எம்பிபிஎஸ் முடித்த டாக்டர் அவர். இவர் டாக்டர் பணியை விட்டுவிட்டு திரைத்துறையில் தற்போது முக்கிய கதாநாயகியாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவர் டாக்டர் உடையில் இருப்பது போன்ற புகைப்படம் நெட்டிசன் மத்தியில் முக்கிய பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிதி ஷங்கரின் குறிப்பிட்ட படத்திற்கு ரசிகர்கள் பலரும் நடிப்பை விட்டு விட்டு மருத்துவராகி விட்டீர்களா என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். அதைத்தொடர்ந்து அதிதி ஷங்கர் டாக்டர் A என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இந்த புகைப்படம் திரைப்படத்தின் ஏதேனும் கதாபாத்திரத்தினுடைய தோற்றமாக இருக்கலாம் என்றும் அதிதி சங்கரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.