Ajith
Ajith

மீண்டும் ரேஸில் கலக்கும் அஜித்... வைரலாகும் வீடியோ!

Published on

நடிகர் அஜித் மீண்டும் ரேஸில் கலக்கும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வரூகிறது.

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று வந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில வாரங்கள் கழித்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய அஜித் வெளிநாடு செல்ல உள்ளார். விடாமுயற்சியின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது.

இதையும் படியுங்கள்:
விஜய் குரலில் வெளியான கோட் பாடல்... வைப் செய்யும் ரசிகர்கள்!
Ajith

இதற்கு முன்னதாக ஊரை சுற்றி வரும் அஜித், சமீபத்தில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். இந்த நிலையில், தற்போது கார் ரேஸை தொடங்கியுள்ளார். நடிப்பை தாண்டி மோட்டார் பைக் ரேஸ், ஸ்போர்ட்ஸ் கார்கள் மீதான ஆர்வத்திற்கும் அஜித் பெயர் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. பல நாட்களில் ரேஸில் ஈடுபடாமல் இருந்த அஜித், தற்பொது மீண்டும் அதை கையிலெடுத்துள்ளார். துபாயில் அவர் கார் ரேஸில் ஈடுபடும் போட்டோக்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com