உலக சுற்றுலா செல்கிறாரா நடிகர் அஜித்?

உலக சுற்றுலா செல்கிறாரா நடிகர் அஜித்?

னது 62 ஆவது படத்தை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் உலக சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார் நடிகர் அஜித். ஆனால் அந்த திரைப்படம் தாமதமாவதால், உடனடியாக உலக சுற்றுலா செல்ல இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருந்த அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்திலிருந்து, முதலில் இயக்குனராக நியமிக்கப்பட்ட விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அதை அடுத்து அந்த திரைப்படத்தை இயக்க யாரும் கிடைக்காத நிலையில், மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இந்த இயக்குனரின் திரைக்கதைகளில் எக்கச்சக்க மாற்றங்கள் இருப்பதால், அஜித்குமாரின் அடுத்த திரைப்படம் எப்போது ஆரம்பமாகும் என்றே தெரியவில்லை.  

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல, இத்திரைப்படம் தூங்குவதற்கு முன்பாகவே பல சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் அஜித் இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு நிம்மதியாக உலக சுற்றுலா செல்லலாம் என இயக்குனர் மகிழ் திருமேனிக்கு நேரத்தை ஒதுக்கி கொடுத்த நிலையில், இந்த வாய்ப்பை நழுவி விடக்கூடாது என்பதற்காக கதையை சிறப்பாக உருவாக்கி வந்திருக்கிறார். 

லொகேஷன் தேர்வு, நடிகர்கள் தேர்வு, உள்ளிட்ட பணிகளில் அதிக கவனம் செலுத்தி மும்முரமாக வேலை செய்து வந்த நிலையில், நடிகர் அஜித்குமார், இயக்குனரின் திரைக்கதைகளில் சில திருத்தங்களை சொல்லியுள்ளதால், திரைப்படம் தாமதமாகிறது என பேச்சுக்கள் அடிபடுகிறது. தனக்கு பிடித்த மாதிரியான சூப்பரான ஸ்கிரிப்டை இயக்குனர் உருவாக்க தாமதிப்பதால் அஜித் வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் இந்த நேரத்தை வீணடிக்காமல் தனது உலக சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியை முடித்துவிடலாம் என்ற முடிவுக்கு அஜித் வந்துவிட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வருகிற மே 1ம் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய 62வது திரைப்படத்தின் அறிவிப்பு ஏதாவது வெளிவரும் என ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்நிலையில் அவருடைய திரைப்படம் தாமதமாகிறது, இதனால் அஜித்குமார் உலக சுற்றுலா செல்கிறார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது. இருப்பினும், சிலர் இது பொய்யாக இருக்கும். நாம் அனைவரும் எதிர்பார்ப்பது போல், அஜித்குமாரின் 62வது திரைப்படம் சார்ந்த தகவல்கள் மே 1ஆம் தேதி கட்டாயம் வரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். 

அஜித்குமார் உலகம் சுற்றுலா செல்லும் முடிவில் இருந்து மாறுபடுவாரா? அல்லது தனது சுற்றுலாவை முடித்துவிட்டு வந்து 62வது படத்தில் நடிப்பாரா? என பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com