நடிகர் அஜித்
நடிகர் அஜித்

திருப்பதி கோயிலில் நடிகர் அஜித் வழிபாடு: வைரலாகும் காட்சிகள்!

Published on

திருப்பதி கோயிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில், ஏராளமான நடிகர், நடிகைகள் தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் பட்டு வேட்டி சட்டையில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தைத் தொடர்ந்து அஜித் மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபத்தில் நடைபெற்று வந்தது. இதில் அஜித் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அண்மையில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்னும் சில வாரங்கள் கழித்து தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உன்னி முகுந்தன் நடிப்பில் உருவாகும் ‘மார்கோ’: மாஸாக வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
நடிகர் அஜித்

இந்த நிலையில், விடாமுயற்சி படத்தில் எஞ்சியுள்ள படப்பிடிப்பை நிறைவு செய்ய அஜித் வெளிநாடு செல்ல உள்ளார். விடாமுயற்சியின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதி உள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் விடாமுயற்சி படக்குழு வெளிநாடு செல்ல உள்ளது. இந்நிலையில்தான் வெளிநாடு செல்லும் முன்பு திருப்பதி கோயிலுக்குச் சென்று நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையுடன் வந்த அஜித், சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

logo
Kalki Online
kalkionline.com