வெள்ளத்தில் தத்தளித்த நடிகர்கள்... ஓடி வந்து உதவிய நடிகர் அஜித்!

vishnu vishal, amirkhan and ajithkumar
vishnu vishal, amirkhan and ajithkumar

மிக்ஜாம் புயலால் சென்னையே தத்தளித்து வருகிறது. திடீரென உருவான புயலால் 4 நாட்கள் சென்னையே தவித்து வருகிறது. நேற்றே இந்த புயல் கரையை கடந்த நிலையில், இன்றும் சென்னையில் பாதிப்பு குறையாமல் உள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை வெள்ளத்தில் சிக்கி தவித்த இரண்டு பிரபலங்களை நேரில் சென்று சந்தித்து உதவியிருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிலிருந்து குட்டி பிரேக் எடுத்து சென்னை வந்த அஜித் இங்கேயே வெள்ளத்தில் சிக்கி கொண்டார்.

​தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் விஷ்ணு விஷால். இப்போது லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார். சென்னையில் அதிக வெள்ளம் ஏற்பட்டதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுள் இவரும் ஒருவராக இருக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் பாலிவுட் நடிகரான அமிர் கான் இருவரும் விஷ்ணு விஷாலின் காரப்பாக்கத்தில் தங்கியிருந்தார்கள். விஷ்ணு விஷால் அவரது பகுதியில் தேங்கிக்கிடந்த தண்ணீர் பற்றியும் மின்சார வசதி, இன்டர்நெட் சேவை, தொலைபேசியில் சிக்னல் என எதுவுமே இல்லாதவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவ தொடங்கியது.

இந்த நிலையை அறிந்து கொண்ட நடிகர் அஜித், மனம் தாங்காமல் விஷ்ணு விஷால் இருக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று நடிகர்களுக்கு மட்டுமின்றி அங்கிருந்த பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த விஷ்ணு விஷால், அமீர்கான் மற்றும் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு லவ் யூ அஜித் சார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com