Actor amitabh bachchan
Actor amitabh bachchan

அமிதாப்பச்சன் மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!

Published on

பிரபல நடிகர் அமிதாப்பச்சன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகர் அமிதாப் பச்சனுக்கு தற்போது 81 வயதாகிறது. அவர் தற்போதும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஏற்ற ரோலில், நடித்து அசத்தி வருகிறார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், டிவி நிகழ்ச்சிகள், விளம்பர நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் நடித்து வருகிறார். ரஜினியின் வேட்டையன் படத்தில் கூட அவர் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இந்நிலையில் இன்று காலை அமிதாப் பச்சன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பையில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிப்பட்டு இருக்கிறார். அங்கு அவருக்கு angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
லொள்ளு சபா நடிகர் திடீரென மருத்துவமனையில் அட்மிட்... என்னாச்சு அவருக்கு?
Actor amitabh bachchan

இருப்பினும் அமிதாப்பச்சன் குடும்பத்தில் இருந்தோ அல்லது மருத்துவமனையில் இருந்தோ அதிகாரபூர்வமாக அமிதாப்பச்சன் உடல்நிலை குறித்த எந்த தகவலையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ’நன்றி உணர்வுடன் எப்போதும்’ என்று பதிவு செய்திருப்பது வைரல் ஆகி வருகிறது. இந்த செய்தி தீயாய் பரவ, ரசிகர்கள் அவர் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com