நடிகர் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர்

"என்னை பல முறை கொன்று விட்டார்கள்" ரோபோ சங்கர்  வேதனை!

Published on

ரஜினி நடித்து நாற்பது ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற படம் துடிக்கும் கரங்கள்.இதே டைட்டிலில் இப்போது விமல் நடித்த திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை வேலு இயக்கியுள்ளார். துடிக்கும் கரங்கள் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் சில தகவல்களை மன வேதனையு டன் பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒரு ஆறு மாதம் உடல் நலமில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தேன் . அப்போது சில யூ டியூப் சேனல்கள், ரோபோ சங்கரின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது. என்னை அந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். நான் இறந்துவிட்டேன். என் டெட் பாடி கொண்டு வரப்படுகிறது. என் மனைவி, மகள் கதறி அழுகிறார்கள் என்று  மிகத்  தவறான, உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பினார்கள்.

அந்த சூழ்நிலையில் நானும் என் குடும்பமும்  சொல்ல முடியாத வேதனை அடைந்தோம். நான் உடலால் அடைந்த வேதனைகளைவிட மனதால் அடைந்த வேதனைகள்தான் அதிகம். இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன். யூ டியூப்பில் என்னை பற்றி பேசியவர்கள் மன்னிப்பு கேட்க தயாரா. இறப்பு என்பது ஒரு முறை வருவது. என்னை இவர்கள் பல முறை கொன்று விட்டார்கள். நான் மற்றவர்களை சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகன். என்னை வேதனைப்படுத்தி பார்ப்பதில் யாருக்கு என்ன மகிழ்ச்சி?

பின்னர் பேசிய நடிகர் விமர், " ரோபோ யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காதவன் அவனை காயப்படுத்தி பார்க்க யாருக்கு மனசு வந்தது. துடிக்கும் கரங்கள் படத்தில் ஒரு யூ டியூபரா நடிக்கிறேன். யூ டியூபர் சமூக அக்கறையோடு எப்படி இருக்கனும் என்பதை இந்த படத்தில் டைரக்டர் சொல்லிருக்கார். இந்த படம் பொழுதுபோக்காக மட்டும் இல்லாமல் ஒரு விழிப்புணர்வை தரும் என்றார்.

logo
Kalki Online
kalkionline.com