தயாராகும் சார்பட்டா 2.. தீவிர பயிற்சியில் ஆர்யா.. வைரலாகும் வீடியோ!

ஆர்யா
ஆர்யா

நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை 2 படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் சார்பட்டா பரம்பரை. துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் ஷபீர் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

அதிக குத்து சண்டை, காதல், காமெடி, செண்டிமெண்ட் என்று அணைத்து அம்சங்களையும் வைத்து நம்மை பழைய வட சென்னைக்கே கூட்டி சென்ற இந்த படத்தின் 2ஆம் பாகம் வரும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில், இது தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி வரும் தங்கலான் படம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக சார்பட்டா பரம்பரை 2ஆம் பாகம் தயாராகவுள்ளது. முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த திரைப்படத்திலும் இடம்பெறுவார்கள் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
அரசியலுக்கு வரும் நடிகர் விஜய்.. கட்சி பெயர் இதுதான்?
ஆர்யா

இந்த நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாகவே, சமீப நாட்களில் நடிகர் ஆர்யா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது தீவிரமாக குத்துச்சண்டை செய்யும் வீடியோவை ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com