நதி மரணங்கள் - பாக்யராஜ் கிளப்பும் பகீர்!

Director Bhaghyaraj
Director Bhaghyaraj

ப்படிஎல்லாம் நடக்குமா? இப்படியெல்லாம்கூட  மனிதர்கள்  இருப்பார்களா? என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு தகவல் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்து உள்ளார் இயக்குநர் மற்றும் நடிகருமான பாக்கியராஜ்.

சமீபத்தில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சட்லஜ் நதியில் விழுந்து உயிரிழந்த முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல்  கடந்த எட்டு நாட்களுக்கு பின்பு நேற்று கண்டெடுக்கபட்டு வெற்றி தான் என்று உறுதி செய்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் தமிழ் நாட்டில் நடந்த நதியில் நடக்கும் மர்மமான கொலைகள் பற்றி இயக்குநர் பாக்யராஜ் பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் கவனம்பெற்றுள்ளது. பாக்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில்,” கோபிசட்டி பாளையம் பகுதியில் உள்ள அம்பாரம்பளையம் ஆற்றுக்கரையில்பாக்யராஜ் அடிக்கடி படபிடிப்புக்கு செல்வது வழக்கம். அங்கே பிக்னிக் வரும் சிலர் குளிக்கும் போது மாயமாகி விடுவார்களாம். ஒரு வேளை நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதி இறந்தவர்களின் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள நீச்சல் தெரிந்த ஒருவரிடம் அணுகி எப்படியாவது பிணத்தையாவது மீட்டு தாருங்கள் என்று அழுவார்களாம்.

நீச்சல் தெரிந்த நபர் இது கடினம் சூழலில் மாட்டியிருக்கலாம். மூச்சை அடக்கி பிணத்தை எடுப்பது கடினம் என்பாராம். கெஞ்சி கூத்தாடிய பிறகு அந்த நபர் சில ஆயிரங்களை பெற்று கொண்டு தண்ணீரில் இறங்கி சில மணி நேரங்கள் கழித்து  பிணத்தை எடுத்து தருவாராம்.உடலாவது கிடைத்ததே என்று உறவினர்கள் சென்று விடுவார்களாம். 

சில நாட்களுக்கு பிறகுதான் பாக்கியரா ஜ் அவர்களுக்கு ஒரு விஷயம் தெரிய வந்துள்ளது. அதாவது பணம் வாங்கி கொண்டு பிணத்தை எடுக்கும் நபர் தான் தனியாக நீரில் மூழ்கி  காத்திருந்து குளிக்கும் நபரை யாருக்கும் தெரியாதவாரு  நீரில் மூழ்கி இருந்து கண்காணித்து சமயம் பார்த்து காலை உள்ளே பிடித்து இழுத்து நீரில் இருந்து வெளியே வராத படி சாகடித்து பிணத்தை நீரில் பாறையின் அடியில் ஓரிடத்தில் மறைத்து வைத்து விடுவார். எப்படி இருந்தாலும் இறந்தவரின் உடலை மீட்க   தன்னைதான் அணுகு வார்கள் பணம் பறிக்கலாம் என்பதால் இந்த படு பாதக செயலை அந்த நபர் செய்கிறார் என்று தான் கேட்ட விஷயத்தை பகிர்ந்துள்ளார் பாக்கியராஜ் . நீரில் மூழ்கி தம் கட்டி   இருக்கும் நபர் எவ்வாறு தனது திறமையை   தவறாக பயன் படுத்து கிறார் என்று வருத்தத்துடன் சொல்கிறார் பாக்யராஜ்.

சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உடல் கடந்த எட்டு நாட்களுக்கு பிறகு பாறையின் அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாக்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ வெற்றியின் மரணத்திலும் மற்றும் ஆறுகளில் மூழ்கி இறந்துபோன நபர்களின் மர்ம மரணங்கள் குறித்தும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதையும் படியுங்கள்:
Valentine's Day 2024 - மனைவிக்கான காதல் வரிகள்!
Director Bhaghyaraj

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com