சீயான் விக்ரம் 62... வெளியானது!

சீயான் விக்ரம் 62... வெளியானது!

மாறுபட்ட கதைக்காலங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விக்ரம். தற்போது தன்னுடைய 62வது படத்துக்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தாங்கலான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகப்பெரிய ஜடா முடி, கையயில் ஒரு கம்புடன் ஒரு அகோரியை போல் விக்ரம் தோற்றமளிக்கும் தங்கலான் போஸ்டர் பலரை ஈரத்து வருகிறது. இந்த பரபரப்பு அடங்குவதற்க் குள் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

இன்று காலை முதல் விக்ரம் நடிக்கும் 62 ஆவது படத்திற்க் கு சீயான் 62 என்ற பெயர் கொண்ட போஸ்டர் மீடியாக்களில் வலம் வந்தது. காலை முதல் விக்ரமின் அடுத்த 62 வது படம் என்ன என்ற கேள்வி பலரிடம் வலம் வந்தது.

சில நேரத்திற்க்கு முன் விடை கிடைத்தது. விக்ரமின் 62 வது படத்தை SU அருண் குமார் இயக்குகிறார். ஜி. வி பிரகாஷ் இசை அமைக்கிறார். விக்ரமிடம் அருண் குமார் கதை சொல்லிருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாக வந்து கொண்டிருந்தது. இப்போது உறுதியாகி விட்டது.

இப்படத்தின் காணொளி வெளியாகி உள்ளது அருண் குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்தா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றி கூட அருணுக்கு விக் ரமின் படம் கிடைக்க முக்கிய காரணம் என்கிறார்கள் சிலர். படத்திற்க்கு மிக விரைவில் பெயர் வைக்க போகிறார்கள். HR பிக்ச்சர் இப்படத்தை தயாரிக் கிறது.வரும் புத்தாண்டில் மாறுபட்ட விக் ரமை திரையில் பார்க்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com