CaptainMillerReview
CaptainMillerReview

விமர்சனம்: கேப்டன் மில்லர்!

கேப்டன் மில்லர் -துப்பாக்கியும், தோட்டாக்களும்(2.5 / 5)

சிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்களோடு வெளியாகி உள்ளது தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம்.  சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார்.

கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால்  ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை  ஒழிக்க  நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.

எத்தனை குண்டுகள்  பாய்ந்தாலும்  ஹீரோ மீது    ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா,           பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.

எப்படியும் ஹீரோ ஜெயித்து விடுவார் என்று தெரிந்து விடுவதால் ஈர்ப்பு   ஏற்படவில்லை. துப்பாக்கியும், குண்டு    சத்தமாகவே இரண்டாம் பாதி செல்கிறது. தலித் விடுதலை, விடுதலை போராட்டம், போராளி வாழ்க்கை என்ற மூன்று அமசங்களை படம் பேசினாலும் எதையும் ஆழமாக பேசவில்லை.

சிவராஜ் குமார் -தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சூட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி. வி பிரகாஷ் பழங்குடியினர்     இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.                    தனுஷ் நடிப்பு உணர்வுபூர்வமாக உள்ளது. படத்தில் உள்ள ஒரே பாசிடிவான விஷயம் நடிகர்களின் நடிப்புதான். இளங்கோ குமரவேல், அதிதி பாலன், சிவராஜ்குமார், ஜெயபிரகாஷ் பிரியங்கா மோகன் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை. சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில் வெப்பம் தெரிகிறது. எடுத்து கொண்ட கதைக்கு சரியான திரைக்கதை அமைத் தி ருந்தால் இந்த கேப்டன் மில்லருக்கு அதிகம் வரவேற்பு கிடைத்திருக்கும். 

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com