நடிகர் தனுஷுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா.. வெளியான புதிய படத்தின் அப்டேட்!

நடிகர் தனுஷுடன் ஜோடி சேரும் ராஷ்மிகா.. வெளியான புதிய படத்தின் அப்டேட்!

ருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தனுஷின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய சேகர் கம்முலா இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், புதிய படத்தின் படங்கள் வைரலாகியுள்ளது.

பெயரிடப்படாத இந்த புதிய படத்தில் தனுஷ், நாகார்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தான ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தற்போதைக்கு படத்தின் பெயர் DNS என குறிப்பிடப்பட்டுள்ளது. தனுஷ், நாகார்ஜூன் மற்றும் இயக்குநர் சேகர் கம்முலாவின் பெயர்களை குறிப்பிடும் வகையில் DNS என அழைக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படம் நடிகர் தனுஷின் பான் இந்தியா படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com