மாமன்னன், புஷ்பா படம் குறித்து மனம் திறந்த பகத் பாசில்... என்ன சொன்னார் தெரியுமா?

Fahadh Faasil
Fahadh Faasil

பான் இந்தியா நடிகராக வலம் வரும் நடிகர் பகத் பாசில் தனது மாமன்னன், புஷ்பா படம் குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பகத் பாசில். இவர் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் பாசிலின் மகன். தனது முதல் படத்திலேயே மிகவும் மோசமான விமர்சங்களை சந்தித்தார், இயக்குனர் மகனுக்கு நடிப்பு வரவில்லை என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார். அதன் பின் 6 வருடங்கள் கழித்து கம் பேக் கொடுத்த பகத், தன் மேல் வீசப்பட்ட அத்தனை விமர்சனங்களுக்கும் தனது அசாத்திய நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வியக்க வைக்க தவறியதில்லை.

சமீபத்தில் பகத் பாசில் நடிப்பில் வெளியாகன ஆவேசம் திரைப்படம் பாசிலை ரசிகர்கள் மத்தியில் கொண்டாட வைத்துள்ளது. அட்டகாசமான நடிப்பில் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளார். மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் ரத்னவேல் கதாபாத்திரத்தை சாதி பெருமை பேசும் இளைஞர்கள் சாதி பெருமை பேசும் மீம் மற்றும் பாடல்களுக்கு பயன்படுத்தி வைரலாக்கினர். இது குறித்து பிலிம் கம்பெனிக்கு கொடுத்த பேட்டியில் முதன் முதலில் பேசியுள்ளார் நடிகர் பகத் பாசில்.

இது குறித்து பேசிய அவர், "படத்தில் நடிக்கும் போது குறிப்பிட்ட உயர் சாதியை தான் தனது கதாபாத்திரம் சித்தரிக்கிறது என்பதை தான் உணரவில்லை என்று கூறினார். மேலும், தனக்கு சாதி ரீதியாக கிடைத்த அந்த வரவேற்பு தன்னையும் மீறி நடத்த ஒன்று, அது தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று" என குறிப்பிட்டார் பகத்.

இருப்பினும், உயர் சாதியில் இருக்கும் ஒருவனின் கதாபாத்திரத்தைதான் தான் ஏற்று நடித்தாக ஒப்புக்கொண்ட பாசில், அது ஒரு குறிப்பிட்ட சாதியை சித்தரிக்கும் கதாபாத்திரம் என்பது படத்தின் ரீலீசுக்கு பிறகு தான் உணர்ந்ததாக தெரிவித்தார். மேலும், ரத்னவேல் கதாபாத்திரத்தை மாரி செல்வராஜ் அவரது பார்வையில் சித்தரித்ததாகவும் கூறினார்.

இதையும் படியுங்கள்:
நியூ தக்... கமலின் தக் லைஃப் படத்தில் STR... மாஸ் புரோமோ வைரல்!
Fahadh Faasil

இதே போன்று புஷ்பா படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பகத், 'புஷ்பா படம் பான் இந்திய நடிகராக உங்களை உயர்த்தி கொள்ள உதவியுள்ளதா? என கேட்கப்பட்டதற்கு 'இல்லை' என பதிலளித்துள்ளார் பகத் பாசில். மேலும், இதுப்பற்றி மறைக்க ஒண்ணுமே இல்லை. இயக்குனர் சுகுமாரிடமே இது குறித்து பேசியுள்ளேன்.

நான் 'புஷ்பா' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணமே இயக்குனர் சுகுமார் தான். அவர் மேல் வைத்திருந்த அன்பு தான். இந்தப்படத்திற்கு பிறகு ரசிகர்கள் என்னிடம் ஒரு மேஜிக்கை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். புஷ்பா பான் இந்திய நடிகராக எல்லாம் என்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது என்றெல்லாம் சொல்ல முடியாது. இவ்வாறு அந்த நேர்காணலில் வெளிப்படையாக பகத் பாசில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com