நடிகர் ஹரிஷ் கல்யாண் கடந்த பத்தாண்டுகளாக ஹீரோவாக சினிமாவில் நடித்து வருகிறார். இருப்பினும் சினிமாவில் தனக்கான இடத்திற்க்காக போராடி வருகிறார். வரும் டிசம்பர் 1 அன்று தனது நடிப்பில் வெளியாகும் பார்க்கிங் திரைப்படம் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் திரில்லர் ட்ராமா வகையை சேர்ந்தது
ஹரிஷ் கல்யாண் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். ஹரிஷ் படமென்றால் வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. பார்க்கிங் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த எதிர்ப்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யும் என்கிறார் டைரக்டர்.
இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் இந்துஜா மேயாத மான், பிகில்,மெர்குரி உட்பட பல்வேறு படங்களில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். நன்றாக நடிக்க தெரிந்த நடிகை என ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர். படம் வெளியாவதற்கு முன்பான வியாபாரம் (pre release businesses ) நன்றாக இருப்பதாக சொல்கிறது படக்குழு. M. S. பாஸ்கர்,இளவரசு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துளார்கள்.
பார்க்கிங் திரைப்படதிற்க்கு சாம். C. S இசை அமைத்துள்ளார். சரியான திட்டமிடலுடன் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் பார்க்கிங் போன்ற படங்கள் இன்றைய தமிழ் சினிமாவிற்க்கு தேவை என்கிறது சினிமா வட்டாரம்.சினிமாவில் தனக்கான இடத்திற்க்கும், அங்கீகாரத்திற்க்கும் முயற்சி செய்யும் ஹரிஷ் கல்யாணத்திற்க்கு இப்படம் ஒரு வாய்ப்பாக அமையும் என வாழ்த்துவோம்.