
நடிகர் ஜெய் நடித்துள்ள லேபில் வெப் சீரிஸ் நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் திரைப்படங்கள் தாண்டி தற்போது வெப் சீரிஸில் நடிக்கவும் தொடங்கியிருக்கிறார். நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள முதல் வெப் சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த வெப் சீரிஸிற்கு லேபில் என்று பெயரிடப்பட்டுள்ளது.
லேபில் வெப் சீரிசை இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தான்யா ஹாப் நடித்துள்ளார். மேலும் இந்த வெப் சீரிஸில் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமான் இளவரசு, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த தொடருக்கு ஷாம் சி எஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓ டி டி தளத்தில் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவித்திருக்கிறது. தீபாவளியை மையமாகக் கொண்டு வெப் சீரிஸை வொளியிட படக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
தற்போது பல முன்னணி நடிகர்களும் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடிகர் ஜெய் தொடர் பட வாய்ப்புகளுக்கு மத்தியில் வெப் சீரிஸ் கால் பதித்திருக்கிறார். இந்த வெப் சீரிஸ் நடிகர் ஜெய்யிக்கு எந்த அளவு பெயரை பெற்றுத்தரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.