வித்தியாசதோற்றத்தில் ஜெயம்ரவி.. சைரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம்ரவி
ஜெயம்ரவி

ஜெயம்ரவியின் சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் தான் சைரன். அனுபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் பாடல்களுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

சைரன் படம் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சமீபத்தில் டீசரில் வெளியான ஜெயம் ரவியின் சால்ட் அண்ட் பெப்பர் லுக், பெரும் வரவேற்பை குவித்தது. ஜெயம் ரவி இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் மற்றும் இளமையான தோற்றம் என மாறுபட்ட இரண்டு பாத்திரங்களில் தோன்றுகிறார்.

இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் கூறப்பட்டது. பின்னர் அது வதந்தி என்று தெரியவந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகிறது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடக்க இருக்கிறது.

ஒரு ஜெயில் கைதியாக இருக்கும் ஜெயம்ரவி பரோலில் வெளியில் வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக காட்டிய டீசர் கதை பற்றிய சிறு அறிமுகத்தை தந்தது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெய்லரை, விரைவில் படக்குழு வெளியிடவுள்ளது. இதுவரையிலான ஜெயம்ரவி படங்களிலிருந்து மாறுபட்டதாகத் தெரியும் சைரன் படத்தின் மீது இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com