துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் கமலஹாசன்: இணையத்தில் வைரலான வீடியோ!

துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் கமலஹாசன்: இணையத்தில் வைரலான வீடியோ!
க.இப்ராகிம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

டிகர் கமலஹாசன் பல்வேறு வகையான அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கி சூடும் பயிற்சி எடுப்பது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

நடிகர் கமலஹாசன் தனது நடிப்பின் மூலம் உலகநாயகன் என்று பட்டம் பெற்றவர். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி சாதனை படைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்தியன் திரைப்படத்தின் இமாலய வெற்றியே நீண்ட ஆண்டுகள் கழித்து இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. இந்த படம் தற்போது சினிமா ரசிகர்களுடைய கவனத்தை தன் பக்கம் ஈர்த்து இருக்கிறது.

இந்த நிலையில் தனது 233 வது திரைப்படத்திற்காக நடிகர் கமலஹாசன் பல்வேறு வகையான துப்பாக்கிகளை கொண்டு துப்பாக்கி சூடும் பயிற்சியில் ஈடுபட்டு வருவது போன்ற காட்சியை படத்தை தயாரிக்க உள்ள ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவில் நடிகர் கமலஹாசன் பல்வேறு வகையான அதிநவீன துப்பாக்கிகளை கொண்டு சுட்டு பயிற்சி எடுத்து வருகிறார்.

மேலும் கமலின் இந்த 233 திரைப்படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். ஏற்கனவே ரைஸ் டு ரூல் என்ற தலைப்பில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் ஆக்சன் திரில்லர் நிறைந்த திரைப்படமாக உருவாக உள்ளதாக திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும் படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.

logo
Kalki Online
kalkionline.com