ரீ-ரிலீஸாகும் கமலின் பேசும்படம்: அந்த படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் 92வது பிறந்தநாள்
Director sangitam srinivasa rao Pesum padam acted by kamal hassan
Director sangitam srinivasa rao Pesum padam acted by kamal hassan
Published on

1987ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "பேசும்படம்" திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யபோவதாக ராஜ்கமல் இன்டர்நேஷ்னல் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 35 ஆண்டுகளுக்கு பின்பும் ரசிகர்களால் கொண்டாடப்படும் "பேசும்படம்" கமலின் நடிப்புக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்தாலும், ஒரு நட்சத்திர நாயகன் மற்றும் நாயகியை வைத்துக்கொண்டு ஒரு வாசனமும் இல்லாமல் முழு படமும் சைகை பாஷையிலான புதுமையான திரைக்கதை "பேசும்படம்" மாபெரும் வெற்றிபெற காரணமாக இருந்தது.

35 ஆண்டுகள் கடந்தாலும் "பேசும்படம்" இந்தியா சினிமாவில் தனக்கென தனித்த இடத்தை பிடித்துள்ளது. இப்படம் ரீ-ரிலீஸாகும் செய்தி ரசிகர்களை உற்சாக அடையவைத்தும் இதேவேளையில், இப்படத்தை இயக்கி இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்வை பற்றியும் அறிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் 1931ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி பிறந்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இன்றோடு 92 வயதை நிறைவுச் செய்கிறார். சென்னை மாகாணத்தில் இருந்த நெல்லூர் மாவட்டத்தில் பிறந்த சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.1972 முதல் தெலுங்கு, கன்னட படங்களை இயக்க ஆரம்பித்தார். ராஜாஜி அவர்கள் எழுதிய "திக்கற்ற பார்வதி" கதைதான் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கிய முதல் தமிழ் திரைப்படம்.

Dikkatra parvathi
Dikkatra parvathi

1974 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு பின்பு தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார் சிங்கீதம். ஒதுங்கி இருந்தவரை மீண்டும் தனது ராஜ  பார்வை படத்தை இயக்க  1981 ஆம் ஆண்டு அழைத்து வந்தார் கமல். தனது நூறாவது படமான ராஜபார்வை சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கீதம் ஸ்ரீனி வாச ராவை அழைத்து வந்து படம் இயக்க சொன்னார். படம் சிறப்பாக இருந்தாலும் விமர்சகர்களால் பாராட்டுகளை பெற்று இருந்தாலும் ராஜபார்வை வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்த வருத்ததினால் மீண்டும் தெலுங்கு பக்கமே சென்று விட்டார் சிங்கீதம்.

அதன்பின்னர் 1987ஆம் ஆண்டு  தனது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு டைரக்ஷன் பொறுப்பை ராவிடம் வழங்கினார் கமல். அப்போது கமல், அமலா நடிப்பில் பாடல்கள் வசனங்கள் இல்லாத படத்தை உருவாக்கினார் சிங்கீதம் சீனிவாச ராவ்.படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, படத்தின் கதை "புஸ்பக விமானா" என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடப்பதால் இந்த பெயரையே "புஸ்பகா" என்று வைத்து விட்டார்கள்.

ஆனால், வசனம் இல்லாத இப்படத்திற்க்கு ‘பேசும்படம்’ என்று பெயர் வைத்து தமிழ் நாட்டில்  வெளியிட்டார்கள். இப்படம் தமிழ் நாட்டில் பரவலான வரவேற்பையும்,கர்நாடகவில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் கதாபாத்திரங்கள் சைகை மொழியில் பேசிக்கொள்ள கொள்வார்கள். அதனால் படத்தின் திரைக்கதையே வசனங்கள் தேவையற்றதானது.  

1989 ஆம் ஆண்டு சிங்கீதம் இயக்கத்தில் கமல் இருவேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் வசூல் ரீதியாகவும், இன்றளவும் பேசப்படும் படமாகவும் இருக்கிறது.1990 சிங்கீதம், கமல் கூட்டணியில் உருவான மைக்கேல், மதன, காமராஜன் திரைப்படம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இன்றளவும் இருக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை,வசனங்கள் வழியாக இல்லாமல்,காட்சிகள் வழியே செல்லும். 

1994 ல் சிங்கீதம் இயக்கத்தில் வெளியான மகளிர் மட்டும் வேலை பார்க்கும் பெண்களின் பிரச்சனைகளை நகைச்சுவையாக சொல்வதாக இருக்கும். நாகேஷை பிணமாக நடிக்க வைத்து சிரிப்பலையை வரவழைத்திருப்பார். காதலா, காதலா, மும்பை எக்ஸ்பிரஸ், லிட்டில் ஜான், இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களே. 

List of tamil movies directed by sangitam srinivasa rao
List of tamil movies directed by sangitam srinivasa rao

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சுமார் 65 படங்கள் வரை இயக்கியுள்ளார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். நாட்டிய கலைஞர் ரமணி சந்திரன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மைய்யமாக  வைத்து ராவ் இயக்கிய மயூரி திரைப்படம் மாபெரும் வெற்றிபடமாக அமைந்த அந்தாண்டு ஆந்திர அரசின் நந்தி விருதை 14 பிரிவுகளில் மயூரி திரைப்படம் பெற்றது. கமல் அவர்களை பலர் கொண்டாடுகிறார்கள். கமலே கொண்டாடிய ஒரு கலைஞர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்.  கமல்ஹாசன் தனது குரு  பாலசந்தர்க்கு இணையாக மதித்த இயக்குநர் என்றால் அவர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்தான்.வெவ்வேறு களங்கள், மாறுபட்ட திரைக்கதைகள், உருவாக்கிய சிறந்த காதாப்பத்திரங்கள்  என தனது படைப்பின் வழியே கொண்டாடப்படுகிறார் சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com