பிரபல WWE ரெஸ்ஸிங் போட்டியாளருடன் இணைந்து களத்தில் குதித்த நடிகர் கார்த்தி!

பிரபல WWE ரெஸ்ஸிங் போட்டியாளருடன் இணைந்து களத்தில் குதித்த நடிகர் கார்த்தி!

இந்தியாவில் WWE அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு நிறுவனமான சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தற்போது இந்தியாவில் புதிய ‘WWE, 100% Pure Sports Entertainment’ Campaign வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் கார்த்தி, ஜான் ஆப்ரகாம் இருவரும் பிரபல மல்யுத்த வீரரான Drew Mcintyre உடன் நடித்துள்ளனர்.

drew mcintyre, karthi
drew mcintyre, karthi

இதுகுறித்து, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ்ஸின் இந்திய தலைமை வருவாய் அதிகாரி - (விநியோகம் மற்றும் சர்வதேச வணிகம் மற்றும் தலைவர் - ஸ்போர்ட்ஸ் கிளஸ்டர்) ராஜேஷ் கவுல் தெரிவிக்கையில், 'WWE மல்யுத்த விளையாட்டு குறித்து இளைஞர்களுடனான ஈடுபாட்டை அதிகப்படுத்துவதும், அவர்களுக்கு முழுமையான WWE அனுபவத்தை வழங்குவதுமே முக்கிய நோக்கமாக இருக்கிறது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவானது இரண்டு பதிப்புகளாக வெளிவந்துள்ள நிலையில், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்துள்ளது. இந்த Campaign-ஐ பொறுத்தவரை இந்தி பேசும் இடங்களிலும், தெற்கு சந்தைகளையும் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பதிப்புகளாக வெளிவந்துள்ள இந்த வீடியோவில் வருகின்ற காட்சி என்னவென்றால், 'வங்கி கொள்ளை நடக்கிறது. அப்போது அந்த வங்கி கொள்ளையை தடுக்க நட்சத்திரங்கள் உள்ளே நுழைந்து WWE ரெஸ்லிங் பாணியில் கொள்ளையர்களை அடித்து துவம்சம் செய்து அனைவரையும் காப்பாற்றுவதுபோல் அமைந்துள்ளது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் கார்த்தியுடன் பிரபல மல்யுத்த வீரரான Drew Mcintyre இணைந்து நடித்துள்ளார். இந்தியில் ஜான் ஆப்ரகாமுடன் Drew Mcintyre இணைந்து நடித்துள்ளார்.

சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 (ஆங்கிலம்), சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 (ஹிந்தி) & சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 (தமிழ் & தெலுங்கு) சேனல்களில் செவ்வாய்க்கிழமைகளில் WWE Raw, புதன்கிழமைகளில் WWE NXT மற்றும் சனிக்கிழமைகளில் WWE Smack Down ஆகியவற்றின் நேரடி ஒளிபரப்பை ரசிகர்கள் கண்டு மகிழலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com